உலகக் கோப்பை அணியில் ஐபிஎல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது கோலி!

Updated: 01 March 2019 18:20 IST

ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை ஹைதராப்பத்தில் நடைபெறுகிறது.

Virat Kohli Says IPL Will Have No Impact On India
விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. © AFP

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பைக்கு முன்பாக தனது கடைசி ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இந்தியா ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடர் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை உறுதி செய்வதற்கான தொடராக  அமையும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி ''ஐபிஎல் போட்டிகள் எந்த விதத்திலும் இந்திய அணியின் உலகக் கோப்பை தேர்வை நிர்ணயிக்காது" என்றார். 

மேலும், "நாங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பாக திடமான அணியை உறுதி செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக சரியான அணியை முடிவு செய்ய வேண்டும். ஐபிஎல் அந்த அணியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்" என்றார். 

ஒருசில வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஒழுங்காக ஆடவில்லை என்றால் அணி மாறுமா என்றால் அது நிச்சயம் இல்லை என்பதே பதில் என்றார்.

ஐபிஎல் தொடரின் 12வது சீஸன் முடிந்து 10 நாட்களே இடைவெளி இருப்பதால், வேகப்பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடரை துறக்க வேண்டும் என்று ஏற்கெனவே கூறிய கருத்தை மீண்டும் வலுப்படுத்தினார்.

டி20 தொடரை இந்தியா இழந்தது. இதற்கு கோலி அணியில் அதிகமான பரிசோதனை முயற்சிகளும், ஆஸ்திரேலியாவின் சிறப்பான ஆட்டமும் காரணம் என்றார்.

பாசிட்டிவான விஷயங்களை முன்னிறுத்தி உலகக் கோப்பையை அணுகுவோம் என்றார் விராட் கோலி.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைக்கு 10 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது
  • ஐபிஎல் போட்டிகள் உலகக் கோப்பை அணியை பாதிக்காது: கோலி
  • விராட் கோலி தலைமையிலான அணி முதல் தொடரை தோற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
Advertisement