"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை

Updated: 17 July 2019 19:22 IST

"இங்கிலாந்து முதல் முறையாக கடந்த ஞாயிறன்று உலகக் கோப்பையை வென்றது. சென்ற உலகக் கோப்பை தொடரில் உங்கிலாந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.

Jos Buttler Likely To Replace Eoin Morgan, Says Andrew Strauss
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டராஸ், மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கிவிடலாம் என்று கூறியுள்ளார். © AFP

இங்கிலாந்து முதல் முறையாக கடந்த ஞாயிறன்று உலகக் கோப்பையை வென்றது. சென்ற உலகக் கோப்பை தொடரில் உங்கிலாந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. ஆனால், நான்கு ஆணுகளில் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி மீண்டு வந்து கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டராஸ், மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கிவிடலாம் என்று கூறியுள்ளார். 

"ஜாஸ் பட்லர் ஒரு திறமையான வீரர். அவர் ஆட்டத்தை நன்கு கணித்து வைத்திருப்பவர். அதனால் அவர் அடுத்த கேப்டனுக்கு தகுதியானவர்" என ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார்.

மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி உச்சத்தை எட்டியுள்ளது. அதனை மறுக்க முடியாது. அவர் விரும்பினால் மாற்றத்தை செய்யலாம் என்று கூறியுள்ளார். 

"தோல்விகளிலிருந்து மீண்டு ஆஷஸை வென்று, ஒருநாள் தொடரில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளனர். இதற்கு கேப்டனின் பங்களிப்பு அதி முக்கியமானது" என்றார். கடந்த நான்கு ஆண்டுகளில் சிறந்த கேப்டனாக மோர்கன் விளங்குகிறார் என்றார். 

"கடந்த உலகக் கோப்பையை நான் பார்த்து கோபப்பட்டிருக்கிறேன். அந்த அணி எதையுமே செய்யவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த முறை அதெல்லாம் மாறி இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

2015 மோர்கனை கேப்டனாக்குவதில் பல யோசனைகள் இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் தனி பாணியை கடைபிடிக்கும் மோர்கனை கேப்டனாக்கியது என்று பலனளித்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி யாராலும் மறக்க முடியாத வெற்றியாக பதிவாகியுள்ளது. சூப்பர் ஓவரும் டை ஆகி பரபரப்பபை கூட்டியது. 

இறுதியில் அதிக பவுண்டரிகளை அடித்த அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. கப்திலின் ஓவர் த்ரோ, ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு சென்றது இன்று வரை சர்ச்சையாக தொடர்க்க்றது என சுவாரஸ்ய தருணங்களால் நிரம்பி வழிந்தது 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டி!

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
களத்தில் ஆபாசமான வார்த்தை பேசியதற்காக ஜோஸ் பட்லருக்கு அபராதம்!
களத்தில் ஆபாசமான வார்த்தை பேசியதற்காக ஜோஸ் பட்லருக்கு அபராதம்!
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா?
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
Advertisement