Listen to the latest songs, only on JioSaavn.com
 

'இதுக்குத்தானே காத்துக்கெடந்தோம்...'- ஓய்வுக்குப் பின்னர் முதன்முறையாக கிரிக்கெட் களத்தில் சச்சின்!

Updated: 10 February 2020 12:37 IST

ஐந்தரை ஆண்டுகள் கழித்து களத்தில் கிரிக்கெட் விளையாடிய முன்னாள் இந்திய பேட்ஸ்மேன், ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் எல்லிஸ் பெர்ரி வீசிய ஓவரை பேட் செய்தார்.

Bushfire Bash: Sachin Tendulkar Comes Out Of Retirement To Face Ellyse Perry In Charity Match. Watch Video
முதல் பந்தில் பவுண்டரி அடுத்த சச்சின் டெண்டுல்கர். © AFP

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதில், 33 உயிர்கள் பறிக்கப்பட்டன. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்து போயின. இதனால், இந்தப் பாதிப்புக்கு நிவாரணம் திரட்ட கிரிக்கெட் போட்டி நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களால் முடிவு செய்யப்பட்டது. அதற்கு “புஷ் ஃபையர் பேஷ்” என்று பெயரிடப்பட்டது. இந்தப் போட்டி பிப்பரவரில் 8ம் தேதி தொடங்கப்பட்டது. அந்த நாட்டு ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங் லெவன் மற்றும் கில்கிறிஸ்ட் லெவன் ஆகிய இரு அணிகள் ஆடத் தயாராகின. பாண்டிங் வழிநடத்தும் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக உள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் ஜங்ஷன் ஓவலில் ஆஸ்திரேலிய புஷ் ஃபயர் நிவாரணத்துக்கு உதவுவதற்காக விளையாடிய போட்டிய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவர் பேட் செய்தார். ஐந்தரை ஆண்டுகள் கழித்து களத்தில் கிரிக்கெட் விளையாடிய முன்னாள் இந்திய பேட்ஸ்மேன், ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் எல்லிஸ் பெர்ரி வீசிய ஓவரை பேட் செய்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் சச்சின் ஒரு பவுண்டரியை விலாசினார். 

ஐந்தரை ஆண்டுகள் கழித்து களத்தில் பேட் செய்த சச்சின் டெண்டுல்கர்:

டெண்டுல்கர் சனிக்கிழமை ட்விட் ஒன்றில் தனக்கு தோள்ப்பட்டை காயம் இருப்பதாக வெளிப்படுத்தினார். இருப்பினும் ‘டாக்டரின் அறிவுரையை எதிர்த்து' தான் பேட் செய்வதாக உறுதியளித்திருந்தார். 

“நான் அங்கு சென்று ஒரு ஓவர் பேட் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் (தோள்ப்பட்டை காயம் காரணமாக டாக்டரின் அறிவுரையை எதிர்த்து). இந்தக் காரணத்துகாக நாம் கட்டாயம் பணம் திரட்ட முடியும்” என்று சச்சின் டெண்டுல்கர் பெர்ரி சமூக வலைதளத்தில் பதிவிட்ட சவால் வீடியோவுக்கு பதிலளித்தார்.

முன்னதாக ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்ரி, “ஹே சச்சின். ஆஸ்திரேலியாவில் புஷ் ஃபயர் போட்டியை நீங்கள் ஆதரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று பதிவிட்டார்.

“நீங்கள் ஒரு அணிக்கு பயிற்சி அளிக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், எங்களில் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, ஓய்விலிருந்து வெளியே வந்து ஜங்ஷன் ஓவரில் நீங்கள் ஒரு ஓவரை விளையாடப் போகிறீர்கள் என்பது தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது' என்றார் அவர்.

மேலும் “உங்களுக்கு பந்துவீச நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் பேட் செய்வதால், இன்னும் அதிகமான பணம் திரட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காக நீங்கள் ஏற்கெனவே நிறைய செய்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்” என்றார்.

“நீங்கள் இங்கு வர தயாராக இருந்தால், உங்களை இங்கு வரவேற்பற்கு மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் பேட் செய்யும் போது அதை ஃபீல்டிங் செய்ய சில பெண்கள் காத்திருக்கிறார்கள். அனைத்திற்கும் நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார் பெர்ரி.

ஒரு அணிக்கு 10 ஓவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்ட போட்டியில், முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் 26 ரன்களும், மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட் பிரைன் லாரா 30 ரன்களும் குவித்தனர்.

பாண்டிங் லெவன் அணி கில்கிறிஸ்ட் லெவன் அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் குவித்தது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஓய்வுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவர் விளையாடினார்
  • அவர் சிறப்பு ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் எல்லிஸ் பெர்ரியை சந்தித்தார்
  • ஐந்தரை ஆண்டுகளுக்கு பிறகு டெண்டுல்கர் களத்துக்கு திரும்பினார்
தொடர்புடைய கட்டுரைகள்
“அது எப்படி அவுட் இல்லை?” - டெண்டுல்கருக்கு எதிரான முறையீடு குறித்து கேள்வி எழுப்பும் வார்னே!
“அது எப்படி அவுட் இல்லை?” - டெண்டுல்கருக்கு எதிரான முறையீடு குறித்து கேள்வி எழுப்பும் வார்னே!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
“வெளியே செல்லாதீர்கள்... உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது” - ரோஹித் ஷர்மா!
“வெளியே செல்லாதீர்கள்... உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது” - ரோஹித் ஷர்மா!
“பிரதமர் மோடியோட என்ன டிஸ்கஸ் செய்தேன்னா...” - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்
“பிரதமர் மோடியோட என்ன டிஸ்கஸ் செய்தேன்னா...” - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
Advertisement