டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!

Updated: 24 August 2019 14:22 IST

 50 விக்கெட்டுகளை 11 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா வீழ்த்தியுள்ளார். முன்னதாக வெங்கடேஷ் பிரசாத் மற்றும் முகமது ஷமி இருவரும் இதை 13வது டெஸ்ட் போட்டியில் செய்தனர்.

Jasprit Bumrah Beats Ravichandran Ashwin To Achieve This Feat In Tests
பும்ரா தரேன் பிராவோவை அவுட் ஆக்கி தன்னுடைய 50வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் பும்ரா தரேன் பிராவோவை அவுட் ஆக்கி தன்னுடைய 50வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர் ரவிச்நதிரன் அஸ்வினின் குறைந்த பந்துகளில் 50 விக்கெட் வீழ்த்திய சாதனையை பும்ரா இப்போது முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா 2465 பந்துகளும், அஸ்வின் 2597 பந்துகளும் பயன்படுத்தி கொண்டனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில், பும்ரா மிக முக்கியமானவராக விளங்குகிறார்.  50 விக்கெட்டுகளை 11 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா வீழ்த்தியுள்ளார். முன்னதாக வெங்கடேஷ் பிரசாத் மற்றும் முகமது ஷமி இருவரும் இதை 13வது டெஸ்ட் போட்டியில் செய்தனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஒரு விக்கெட் விக்கெட் வீழ்த்தினார்.

பும்ரா, 11 டெஸ்ட் போட்டிகள் ஆடி 2.66 எக்கானமியுடன் உள்ளார். அவரின் சிறந்த பந்துவீச்சு 6/33 என்ற கணக்கில் உள்ளது.

 கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றார் பும்ரா. அதன்பின் இந்திய கிரிக்கெட் அணியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் பேட் செய்த பும்ரா, 297 ரன்கள் குவித்தார். நடப்பு டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ரஹானே 81 ரன்களும், ஜடேஜா 58 ரன்களும் குவித்தனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் பும்ரா” - கேன் வில்லியம்சன்
“பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் பும்ரா” - கேன் வில்லியம்சன்
டி20 தரவரிசை: அதிரடியான ஆட்டத்துக்கு பின் 2வது இடத்தைப் பிடித்த கே.எல்.ராகுல்!
டி20 தரவரிசை: அதிரடியான ஆட்டத்துக்கு பின் 2வது இடத்தைப் பிடித்த கே.எல்.ராகுல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
பிசிசிஐ ஆண்டு விழா நிகழ்ச்சியில் கோலி பிரகாசமான புன்னகையுடன் காணப்பட்டார்!
பிசிசிஐ ஆண்டு விழா நிகழ்ச்சியில் கோலி பிரகாசமான புன்னகையுடன் காணப்பட்டார்!
Advertisement