பிஷன் பேடி "தகுதியில்லாத மகனை அணியில் சேர்க்க நினைத்தார்" - கம்பீர்!

Updated: 05 August 2019 15:25 IST

இதற்கு முன் சைனியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடக்க நினைத்தவர்களுக்கு கம்பீர் பதிலளித்துள்ளார். இந்தப் போட்டிக்கு பிறகு, கவுதம் கம்பீருக்கும், பிஷன் பேடிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.

Bishan Bedi Pushed "His Undeserving Son For Selection": Gautam Gambhir Hits Back
"தகுதியில்லாத மகனை" டெல்லி அணியில் புகுத்த நினைத்தார் என்று பிஷன் பேடி என்று பதிலளித்துள்ளார் கம்பீர். © AFP

IND vs WI, T20: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த சனிக்கிழமை முதல் டி20 போட்டியை ஆடியது. அதில், வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி (Navdeep Saini) தன்னுடைய முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். தன்னுடைய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதற்கு முன் சைனியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடக்க நினைத்தவர்களுக்கு கம்பீர் (Gautam Gambhir) பதிலளித்துள்ளார். இந்தப் போட்டிக்கு பிறகு, கவுதம் கம்பீருக்கும், பிஷன் பேடிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரராக கம்பீர் டிடிசிஏ நபர்களான பிஷன் பேடி (Bishan Bedi) மற்றும் சேத்தன் சவுகான் இருவரையும் கண்டித்து ட்விட் செய்தார். அதற்கு முன்னாள் ஸ்பின்னர் கவுதம் கம்பீருக்கு பதிலளிக்கும் விதமாக, "பாராளுமன்ற உறுப்பினர் ஆன பின்னும் தெளிவடையவில்லை" என்று கூறினார். "தகுதியில்லாத மகனை" டெல்லி அணியில் புகுத்த நினைத்தார் என்று பிஷன் பேடி என்று பதிலளித்துள்ளார் கம்பீர்.

நவ்தீப் சைனியின் திறமையை கண்ட கம்பீர், சைனியை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வலியுறுத்தினார். அப்போது டெல்லி ரஞ்சி அணிக்காக தேர்வுக்குழு கமிட்டியில் இருந்த முன்னாள் வீரர்கள் பிஷன் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகிய இருவரும் வெளிமாநில வீரரை டெல்லி அணியில் ஆடவைக்கமுடியாது என்று காரணம் காட்டி கம்பீரின் கோரிக்கையை புறக்கணித்தனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதக் டி20 போட்டியில், ஹரியான மாநிலத்தில் பிறந்த சைனியின் பந்துவீச்சை பார்த்து வியந்தார் கவுதம் கம்பீர்.

சனிக்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் சைனி 17 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற செய்தார். இதன் பின் கம்பீர் முன்னாள் வீரர்கள் இருவரை சீண்டினார்.

அது குறித்து சைனி முதல் ஓவரை வீசி முடித்த உடன் பதிவிட்டார் கம்பீர். "உங்கள் அறிமுகப் போட்டிக்கு வாழ்த்துக்கள் சைனி. பவுலிங் போடும் முன்பே 2 விக்கெட்கள் வீழ்த்தி விட்டீர்கள் - பிஷன் பேடி, சேத்தன் சவுகான். நீங்கள் இரங்கல் எழுதிய ஒரு வீரர் அறிமுகம் ஆவதை பார்த்து அவர்களின் மிடில் ஸ்டம்ப் காலியாகி விட்டது. அவமானம்!" என கூறி இருக்கிறார் கம்பீர்.

கம்பீருக்கு பதிலளித்த பேடி, "நான் வெல்ல குனிய வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் ட்விட்டரில் எந்த பதிவிக்கும் பதிலளிக்க போவதில்லை. நான் நவ்தீப் சைனி குறித்து எந்த தவறாக விஷயத்தையும் சொல்லவில்லை. அதை யாராவது செய்திருந்தால், அது அவர்களுக்கு பொறுப்பு" என்றார்.

2013ம் ஆண்டு சைனி டெல்லியை சேர்ந்தவர் இல்லை என்று பேடி மறுத்தார் என்ற தகவலை கம்பீர் வெளியிட்டார். ஆனால், அதை பேடி முற்றிலும் மறுத்தார்.

டெல்லி அணியின் தேர்வுக் குழுவில் இருந்த பேடி மற்றும் சவுகானிடம் சைனியை டெல்லி ராஞ்சி அணியில் சேர்க்கும் படி கேட்டுள்ளார். அதற்கு வெளிமாநிலத்தவர் அணியில் சேர்க்க முடியாது என்று காரணம் காட்டியுள்ளனர்.

பேடி மற்றும் சவுகான் மீது கம்பீர் குற்றம்சாட்டுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் சைனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்ட போதும் கம்பீர் இதை சுட்டிக்காட்டினார். ஆனால், அந்த போட்டியில் சைனி ஆடவில்லை.

சைனி இதற்கு முன்னர், என்னுடைய வெற்றி அனைத்துக்கும் கம்பீர் தான் காரணம் என்று கூறியிருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
அருண் ஜெட்லி மைதானத்தில் கவுதம் கம்பீர் ஸ்டாண்டை வெளியிட்டது டிடிசிஏ!
அருண் ஜெட்லி மைதானத்தில் கவுதம் கம்பீர் ஸ்டாண்டை வெளியிட்டது டிடிசிஏ!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
இலங்கை வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை கேலி செய்த கம்பீர்
இலங்கை வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை கேலி செய்த கம்பீர்
"உங்களுக்கு ஏற்ற போட்டிகளை தேர்வு செய்யாதீர்கள்" - தோனி மீது கோபப்பட்ட கம்பீர்
"உங்களுக்கு ஏற்ற போட்டிகளை தேர்வு செய்யாதீர்கள்" - தோனி மீது கோபப்பட்ட கம்பீர்
Advertisement