"வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை" - பாகிஸ்தான் பயிற்சியாளரின் டயட் ப்ளான்!

Updated: 17 September 2019 16:41 IST

மிஸ்பா உல் அக், அணியின் மோசமான உடற்பயிற்சி நிலைகளைக் கருத்தில் கொண்டு, அணிக்கு எண்ணெய் உணவு மற்றும் இனிப்புகளை இல்லாத புதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

Pakistan Coach Misbah-Ul-Haq Cracks The Whip, Bans Biryani, Sweets For Cricketers: Reports
உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்றதற்காக பாகிஸ்தான் அணி பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

பாகிஸ்தான அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் அக், அணியின் மோசமான உடற்பயிற்சி நிலைகளைக் கருத்தில் கொண்டு, அணிக்கு எண்ணெய் உணவு மற்றும் இனிப்புகளை இல்லாத புதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஐஏஎன்எஸ் தகவல்படி, மிஸ்பா உல் ஹக் வீரர்களின் மோசமடைந்து வரும் உடற்பயிற்சி தரங்களைப் பற்றி ஒரு குறிப்பை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு ஒரு புதிய கட்டளையை கொண்டு வந்துள்ளார். இது அவர்களை மிகவும் சுறுசுறுப்பாக களத்தில் செயல்பட உதவும் என்று தெரிகிறது.

அணியில் புதிய உடற்பயிற்சி கலாச்சாரத்தை வளர்க்க தேசிய முகாம் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் உள்ள வீரர்களுக்கான உணவில் மாற்றம் செய்ய மிஸ்பா கேட்டுள்ளார் என்று தெரிகிறது. வீரர்கள் பிரியாணி அல்லது எண்ணெய் நிறைந்த சிவப்பு இறைச்சி உணவு அல்லது இனிப்பு உணவுகளை உட்கொள்ள மாட்டார்கள் என்று 43 வயதான பயிற்சியாளர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்றதற்காக பாகிஸ்தான் அணி பெரிதும் விமர்சிக்கப்பட்டது. பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு 'பிட்சா மற்றும் பர்கர்' சாப்பிட்டதற்காக கேப்டன் சர்ஃபர்ஸ் அகமதின் அணியை குற்றஞ்சாட்டினார்.

"உள்நாட்டு போட்டிகளிலும், தேசிய முகாமிலும் உள்ள வீரர்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை மிஸ்பா-உல்-ஹக் மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது பிரியாணி அல்லது எண்ணெய் நிறைந்த சிவப்பு இறைச்சி உணவு அல்லது வீரர்களுக்கு இனிப்பு உணவுகள் இல்லை" என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் சாஜ் சாதிக் ட்விட் செய்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர் ஆகிய இரட்டை பதவிகளை மிஸ்பாவுக்கு வழங்கியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வாக்கர் யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விமானத்தில் கைக் கடிகாரத்தை இழந்த வாசிம் அக்ரம்!
விமானத்தில் கைக் கடிகாரத்தை இழந்த வாசிம் அக்ரம்!
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
BBL: விக்கெட் வீழ்த்தியபின் பாகிஸ்தான் வீரரின் கொண்டாட்டம் விமர்சிக்கப்பட்டது!
BBL: விக்கெட் வீழ்த்தியபின் பாகிஸ்தான் வீரரின் கொண்டாட்டம் விமர்சிக்கப்பட்டது!
"இந்து என்பதால் டேனிஷ் கனேரியாவை மோசமாக நடத்தினர்" - சோயிப் அக்தர்!
"இந்து என்பதால் டேனிஷ் கனேரியாவை மோசமாக நடத்தினர்" - சோயிப் அக்தர்!
டெஸ்ட், ஒருநாள் அறிமுக போட்டிகளில் சதமடித்த பாகிஸ்தான் வீரர் அபிட் அலி!
டெஸ்ட், ஒருநாள் அறிமுக போட்டிகளில் சதமடித்த பாகிஸ்தான் வீரர் அபிட் அலி!
Advertisement