அறிமுக வீரரின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய இங்கிலாந்து

Updated: 04 May 2019 12:32 IST

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 66 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Ireland vs England ODI: Ben Foakes Stars As England Survive Ireland Scare
3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 76 பந்தில் 61 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தா போக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். © AFP

பென் ஃபோக்ஸின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரே ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் முதலில் ஆடிய அயர்லாந்து 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 66 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அயர்லாந்தின் அறிமுக வீரர் லிட்டில் ஜோஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் பென் ஃபோக்ஸ் மற்றும் டாம் குரான் முறையே 61 மற்றும் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க 18 பந்துகள் மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த சீசனை வெற்றிகரமாக இங்கிலாந்து துவங்கியுள்ளது. 2019 உலகக் கோப்பையில் ஆடும் அணிகளில் அயர்லாந்து ஆடமுடியாமல் போனது அந்த அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்த அயர்லாந்து சில சிக்கலான கணக்குகள் மூலம் 2019 உலகக் கோப்பை வாய்ப்பை இழந்தது.

இந்த ஒருநாள் போட்டி குறித்து பேசிய மோர்கன் ''பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் டாப் ஆடரில் நாங்கள் சொதப்பினோம்'' என்றார்.

பென் ஃபோக்ஸ் அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடியுள்ளார். டாம் குரானும் சிறப்பாக தனது பங்களிப்பை தந்தார் என பாராட்டினார்.

"சென்ற முறை ஸ்காட்லாந்து வந்திருந்த போது தோற்றோம். ஆனால் இந்த முறை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது". 

3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 76 பந்தில் 61 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தா போக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அயர்லாந்து கேப்டன் போர்டர் ஃபீல்ட் கூறுகையில்  ''அணியின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருந்திருக்க வேண்டும். லிட்டில் அபாரமாக பந்துவீசினார்" என்றார்.

இங்கிலாந்தின் அனுபவமிக்க துவக்க வீரர்கள் இருவருமே ஆடமுடியாமல் போனது. இங்கிலாந்துக்கு பின்னடைவை தந்தது, ஜேசன் ராய் காயத்தாலும், ஹேல்ஸ் ஊக்க மருந்து சோதனையை நிரூபிக்காததாலும் போட்டியில் ஆடமுடியாமல் போனது. 

ஜேம்ஸ் வென்ஸ் மற்றும் மாலன் ஆகியோர் ஹேல்ஸுக்கு மாற்றாக உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ரூட் 7 ரன்னிலும், மோர்கன் டக் அவுட் ஆகையும் வெளியேற இங்கிலாந்து தடுமாறியது. லிட்டில் அபாரமாக பந்துவீசி 45 ரன்களை கொடுத்து 4 வ்சிக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முன்னதாக லியம் ப்ளன்கெட்டின் அபார பந்துவீச்சில் 198 ரன்களுக்கு அயர்லாந்து சுருண்டது. ப்ளென்கட் 4/35, ஆர்ச்சர் அறிமுக போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆர்ச்சருக்கும் இதுதான் அறிமுக போட்டி. முதல் பந்தில் பால் ஸ்டெர்லிங் பவுண்டரி அடித்தார்.

"ஆர்ச்சர் தனது பயணத்தை சிறப்பாக துவங்கியுள்ளார். அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் மோர்கன்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மான்கடிங்கைவிட மோசமான ஸ்டம்பிங் சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்
''மான்கடிங்கைவிட மோசமான ஸ்டம்பிங்'' சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்
அறிமுக வீரரின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய இங்கிலாந்து
அறிமுக வீரரின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய இங்கிலாந்து
Advertisement