"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!

Updated: 18 October 2019 10:45 IST

சச்சின் டெண்டுல்கர், தனது நீண்ட சர்வதேச வாழ்க்கையில் 24 ஆண்டுகள் நீடித்து இந்திய ரசிகர்களுக்கு எண்ணற்ற நினைவுகளை கொடுத்துள்ளார்.

BCCI
டெஸ்ட் வாழ்க்கையை 15,921 ரன்களுடன் முடித்தார் சச்சின் டெண்டுல்கர். © Twitter

கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், தனது நீண்ட சர்வதேச வாழ்க்கையில் 24 ஆண்டுகள் நீடித்து இந்திய ரசிகர்களுக்கு எண்ணற்ற நினைவுகளை கொடுத்துள்ளார். அதில் ஒரு முக்கியமான தருணத்தை குறித்து பிசிசிஐ ட்விட் செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் மிக சிறந்த வீரரான பிரன் லாராவின் டெஸ்ட் ரனகளை கடந்த பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் முந்திய போது எடுக்கப்பட்ட வீடியோவை இன்று பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

"2008ம் ஆண்டில் இந்த நாள் பிரையன் லாராவை விஞ்சி டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக ஆனார் @sachin_rt " என்று பிசிசிஐ ட்விட் செய்தது.

இந்த வீடியோ பல ரசிகர்களின் நினைவுகளை தூண்டியது. ஏனெனில் இது இந்திய மாபெரும் சம்பந்தப்பட்ட சின்னமான தருணத்தை புதுப்பிக்க உதவியது.

2008ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மொஹாலியில் உள்ள ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய டெண்டுல்கர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

சச்சின் பிரையன் லாராவின் 11,953 ரன்களை முறியடித்தார். பீட்டர் சிடலின் பந்தை காலியாக இருந்த மூன்றாம் நபர் பகுதி வழியாக மூன்று ரன்கள் எடுத்தார்.

டெண்டுல்கர் 54.03 சராசரியாக 152 டெஸ்ட் மற்றும் 247 இன்னிங்ஸ்களில் மைல்கல்லை எட்டினார், லாரா 131 டெஸ்ட்டில் முடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலும் ஐந்து ஆண்டுகள் விளையாடிய அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைத்த பின்னர் 2013 நவம்பரில் ஓய்வு பெற்றார்.

அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையை 15,921 ரன்களுடன் முடித்தார், 51 சதங்களின் உதவியுடன் - இவை இரண்டும் இன்னும் உலக சாதனையாக உள்ளது.

சச்சின் வலிமையான சாதனையை நெருங்கும் இடத்தில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேன் தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி மட்டுமே.

டெண்டுல்கர் தனது பெயருக்கு 49 ஒருநாள் சர்வதேச சதங்களை கொண்டுள்ளார், அதே நேரத்தில் கோலி 43 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கரின் மிக அதிக சதங்களை பதிவுசெய்த கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் செல்ல இன்னும் நீண்ட தூரம் உள்ளது. ஏனெனில் அவர் 25 சதங்கள் பின்னால் உள்ளார்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
Rahul Dravid Birthday: டிராவிட்டின் சிறந்த ஒருநாள் போட்டியை நினைவுகூர்ந்தது பிசிசிஐ!
Rahul Dravid Birthday: டிராவிட்டின் சிறந்த ஒருநாள் போட்டியை நினைவுகூர்ந்தது பிசிசிஐ!
ரஹானேவின் "வடை பாவ்" சாப்பிடும் பதிவுக்கு சச்சின் டெண்டுல்கரின் உடனடி பதில்!
ரஹானேவின் "வடை பாவ்" சாப்பிடும் பதிவுக்கு சச்சின் டெண்டுல்கரின் உடனடி பதில்!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
சச்சின் டெண்டுல்கர் தேடிவந்த ஹோட்டல் பணியாளர் இப்போது பதிலளித்துள்ளார்!
சச்சின் டெண்டுல்கர் தேடிவந்த ஹோட்டல் பணியாளர் இப்போது பதிலளித்துள்ளார்!
Advertisement