இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபிக்க தேவையான தகுதிகள்!

Updated: 16 July 2019 20:09 IST

தலைமை பயிற்சியாளராக  விண்ணப்பிப்பவருக்கு குறைந்தபட்சம் 60 வயது இருக்க வேண்டும், இரண்டு சர்வதேச போட்டிகளிலாவது நடுவராக இருந்திருக்க வேண்டும்.

BCCI Releases Eligibility Criteria For Next India Coach
இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தகுதியை அறிவித்துள்ளது. © Twitter

இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தகுதியை அறிவித்துள்ளது. தலைமை பயிற்சியாளராக  விண்ணப்பிப்பவருக்கு குறைந்தபட்சம் 60 வயது இருக்க வேண்டும், இரண்டு சர்வதேச போட்டிகளிலாவது நடுவராக இருந்திருக்க வேண்டும். இந்த முறை மூன்று தகுதியை மட்டுமே வெளியிட்டுள்ளது. ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, 9 தகுதிகள் கொடுக்கப்பட்டிருந்தன.

தலைமை பயிற்சியாளர், டெஸ்ட் போட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகளுக்கு பயிற்சி வழங்கியிருக்க வேண்டும் (associate member/A team/IPL side). விண்ணப்பிப்பவர் 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும்.

இதே தகுதி தான் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விளையாடிய போட்டிகளில் மாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் 10 டெஸ்ட் போட்டிகள் அல்லது 25 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும். 60 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரிக்கும், மற்ற பயிற்சியாளர் குழுவுக்கும் 45 நாட்கள் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது பிசிசிஐ.  இந்திய அணிக்கு புதிதாக தலைமைப்பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், மற்றும் பிசியோதெரஃபிஸ்ட், நிர்வாகிகளை புதிதாக நியமிக்க வேண்டும் என்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதில் இப்போது உள்ளவர்களுக்கு நேரடி நுழைவு அனுமதி என்ற சலுகையையும் வழங்கியுள்ளது. 

முடிவுகளில் பிசிசிஐ எடுக்கும் முடிவே இறுதியானது என்று உச்சநீதி மன்றம் அமைத்த நிர்வாகக்குழு மூலம் நியமிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

விண்னப்பிக்க கடைசி நாள் ஜூலை 30, 2019, மாலை 5 மணி என்று கூறப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கும் மேற்கிந்திய தீவுகள் தொடர் வரை இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதர் ஆகியோரது பயிற்சிக் காலம் 45 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இவர்கள் நால்வருக்கும் அடுத்த பயிற்சியாளர் தேர்வில் நேரடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியா மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளில் பயணம் செய்து ஆடவுள்ளது. செப்டம்பர் 15ம் இந்தியாவில் தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் இந்தியா ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
Advertisement