பிசிசிஐ தலைவராகும் போது கங்குலி அணிந்திருந்த பிளேஸரில் என்ன ஸ்பெஷல்?

Updated: 23 October 2019 18:00 IST

சுவாரஸ்யமாக கங்குலி,  ​​இந்திய கேப்டனாக இருந்தபோது வாங்கிய அதே நீல நிற பிளேஸரை தான் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றபோது அணிந்திருந்தார்.

BCCI President Sourav Ganguly Wears Same Blazer He Wore As India Captain
கங்குலி 39வது பிசிசிஐ தலைவராக ஒன்பது மாத காலத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். © AFP

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, போட்டியின்றி பிசிசிஐ தலைவராக புதன்கிழமை பதிவியேற்றார். மேலும், கங்குலி 65 ஆண்டுகளில் முழுநேர பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற முதல் கிரிக்கெட் வீரர் ஆனார். கேப்டன் விராட் கோலி ஆதரவு அளிப்பது முதல் இந்திய கிரிக்கெட்டில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பு - எம்.எஸ். தோனியின் எதிர்காலம் வரை பேசப்பட்டது. சவுரவ் கங்குலி, டீம் இந்தியாவை வழிநடத்தியதைப் போலவே குழுவையும் வழிநடத்துதாக கூறினார்.

சுவாரஸ்யமாக கங்குலி,  ​​இந்திய கேப்டனாக இருந்தபோது வாங்கிய அதே நீல நிற பிளேஸரை தான் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றபோது அணிந்திருந்தார். "நான் இந்தியாவின் கேப்டனாக இருந்தபோது இந்த (பிளேஸர்) கிடைத்தது. எனவே, இன்று அதை அணிய முடிவு செய்தேன். ஆனால், அது மிகவும் தளர்வானது என்பதை நான் உணரவில்லை," என்று கங்குலி சிரிப்புடன் கூறினார்.

ஊழல் இல்லாத பிசிசிஐயை வழிநடத்துவேன் என்று கங்குலி கூறியுள்ளார்.

" நம்பகத்தன்மை, ஊழல் இல்லாதது மற்றும் நான் இந்தியாவை வழிநடத்தியது போலவே பிசிசிஐயையும் வழிநடத்துவேன். அதில் எந்த சமரசம் இல்லை" என்று அவர் கூறினார்.

கங்குலி 39வது பிசிசிஐ தலைவராக ஒன்பது மாத காலத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்லா விதத்திலும் விராட் கோலிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

"கோலி இந்திய அணியை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். நாங்கள் அவருடன் இருந்தோம், நாங்கள் அவருடன் இருப்போம்," கங்குலி கூறினார்.

"விராட் இப்போது கேப்டனாக இருக்கிறார், எங்களுக்கும் அதே உறவுகள் இருக்கும். இந்தியா சிறப்பாக விளையாட அவருக்கு என்ன தேவைப்பட்டாலும், நாங்கள் அதை அவருக்கு வழங்குவோம்." என்றார்.

தனது சொந்த முடிவை எடுக்க தோனிக்கு போதுமான இடம் தருவதாகவும் கங்குலி கூறினார்.

"அவரது (தோனியின்) மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சாம்பியன்ஸ் மிக விரைவாக முடிப்பதில்லை. எல்லோரும் என்னை எண்ணும்போது நான் திரும்பி வந்து இன்னும் நான்கு ஆண்டுகள் விளையாடினேன்" என்று கங்குலி கூறினார்.

2008ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கங்குலி, 16 சதங்கள் உட்பட 7,212 ரன்கள் குவித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
என்சிஏ குறித்த விஷயங்களை விவாதித்த சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்!
என்சிஏ குறித்த விஷயங்களை விவாதித்த சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்!
Advertisement