பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துகள்: பாண்ட்யா, ராகுல் தடையை நீக்கியது பிசிசிஐ!

Updated: 25 January 2019 11:39 IST

பாண்ட்யா நியூசிலாந்து தொடரிலும், ராகுல் இந்தியா ஏ அணியிலும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI Lifts Ban On Hardik Pandya, KL Rahul Pending Appointment Of Regulator
பாண்ட்யா மற்றும் ராகுல் மீதான தடையை உடனடியாக நீக்குவதாக அறிவித்துள்ளது பிசிசிஐ. © Instagram

பிசிசிஐ நிர்வாகக்குழு பாண்ட்யா மற்றும் ராகுல் மீதான தடையை உடனடியாக நீக்குவதாக அறிவித்துள்ளது. பெண்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவித்ததாக கூறி இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்த குற்றத்துக்காக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து பாதியில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்தியா முதல் முறையாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று சாதனை படைத்தது.

உச்ச நீதிமன்றம் இடைக்கால குழுவை அமைத்து இந்த விஷயத்தை விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் விசாரணை தொடரும் வரையில் இவர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டதை நீக்கி கிரிக்கெட் விளையாட அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி பாண்ட்யா நியூசிலாந்து தொடரிலும், ராகுல் இந்தியா ஏ அணியிலும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பிசிசிஐ ஓம்பட்ஸ்மன் குழு விசாரித்து 11.01.2019 என்று வழங்கப்பட்ட சஸ்பெண்ட் நீக்கப்பட்டு அவர்கள் மீண்டும் கிரிக்கெட் ஆட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத பாண்ட்யா, 'காஃபி வித் கரண்'  என்ற டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில், பெண்கள் குறித்தான சில கருத்துக்களை முன் வைத்தார்.  அது சர்ச்சைக்குள்ளானது.

சர்ச்சையான கருத்துகளை பதிவு செய்ததற்காக வினோத் ராய் மற்றும் எதுல் ஜி விசாரணை அடிப்படையில் விதி 46-ன் படி சஸ்பெண்ட் செய்யப்பட்ட வீரர்களின் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலிய தொடரின் போது பாண்ட்யா மற்றும் ராகும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
  • பாண்ட்யா நியூசிலாந்து தொடரில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • ராகுல் இந்தியா ஏ அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா!
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா!
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
’கொலவெறி’ பாடலை பாடி அசத்திய பாண்டியா சகோதரர்கள்! வைரலாகும் வீடியோ!
’கொலவெறி’ பாடலை பாடி அசத்திய பாண்டியா சகோதரர்கள்! வைரலாகும் வீடியோ!
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
“பாண்டியாவுக்கு முன்னர் பன்ட் இறங்கியது ஏன் தெரியுமா?”- ரோகித் சொல்லும் காரணம்!
“பாண்டியாவுக்கு முன்னர் பன்ட் இறங்கியது ஏன் தெரியுமா?”- ரோகித் சொல்லும் காரணம்!
Advertisement