'இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரானார் தமிழக வீரர்!'

Updated: 21 December 2018 11:28 IST

கேரி கிரிஸ்டனின் ஐபிஎல் பொறுப்புகள் அவரை நிராகரிக்க காரணமானது. இறுதியாக டபள்யூவி ராமன் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

BCCI Appoints WV Raman As Head Coach Of India Women
ராமன் தனது கடைசி சர்வதேச போட்டியை 1997ல் தென்னாப்பிரிக்காவுடன் ஆடினார். © BCCI

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபள்யூவி ராமனை பிசிசிஐ நியமித்துள்ளது. கபில்தேவ், அன்சுமன் கெய்க்வார்ட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு நடத்திய தேர்வில் பிசிசிஐ இவரை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளது. இதனை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகம் அறிக்கையின் மூலம் அறிவித்தது.

இதில், இந்திய ஆண்கள் அணி 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல காரணமான கேரி கிரிஸ்டன் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கான பணிகள் அதிகம் இருப்பதால் இந்தப் பொறுப்பை அவரால் ஏற்க முடியாமல் போயுள்ளது.

கேரி கிரிஸ்டன், ராமன் மற்றும் வெங்கடேஷ் ப்ரசாத் ஆகிய மூவரின் பெயர்கள் இந்தக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது.

கேரி கிரிஸ்டனின் ஐபிஎல் பொறுப்புகள் அவரை நிராகரிக்க காரணமானது. இறுதியாக டபள்யூவி ராமன் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

53 வயதான இவர், இந்திய அணிக்காக 11 டெஸ்ட் மற்றும் 27 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். முதல்தர போட்டிகளில் 132 போட்டிகளில் ஆடி 7900 ரன்கள் குவித்துள்ளார். ராமன் தனது கடைசி சர்வதேச போட்டியை 1997ல் தென்னாப்பிரிக்காவுடன் ஆடினார். இவர் ஒரே ஒரு சர்வதேச சதமடித்துள்ளார், அது 1992ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எடுக்கப்பட்டது. 

இடதுகை வீரரான இவர், ரஞ்சி போட்டிகளில் தமிழ்நாடு, பெங்கால் அணிகளுக்கு பயிற்சியாளராகவும், ஐபிஎல்லில் கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை!
அர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
இங்கிலாந்து தொடர்: 2-1 என்று தொடரை கைப்பற்றியது இந்திய‌ பெண்கள் அணி
இங்கிலாந்து தொடர்: 2-1 என்று தொடரை கைப்பற்றியது இந்திய‌ பெண்கள் அணி
பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
Advertisement