Listen to the latest songs, only on JioSaavn.com
 

"ஆசியா லெவன் vs உலக லெவன் போட்டிகளில் கோலி விளையாட வேண்டும்" - பிசிபி வேண்டுகோள்

Updated: 22 February 2020 10:42 IST

இந்திய அணியின் பரபரப்பான கால அட்டவணையை கருத்தில் கொண்டு, டாக்காவில் நடைபெறும் விளையாட்டுகளுக்கு விராட் கோலி விளையாட வாய்ப்புள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

BCB Wants Virat Kohli For Asia XI vs World XI T20s, BCCI Considering Request
முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக மார்ச் 18 முதல் 22 வரை டாக்காவில் டி20 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது. © AFP

பங்களாதேஷ் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக மார்ச் 18 முதல் 22 வரை டாக்காவில் திட்டமிடப்பட்டுள்ள இரண்டு டி20 போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி பங்கேற்க வேண்டும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) விரும்புகிறது. பிசிபியின் கோரிக்கையை பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இந்த இரண்டு ஆட்டங்களுக்கும் ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் அணிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் மார்ச் 18-22 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும் என்று பிசிபி தலைமை நிர்வாக அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்தார். “நாங்கள் இன்னும் திட்டமிடம் மற்றும் வீரர்களின் ஒப்புதல் போன்றவற்றுக்காக காத்திருக்கிறோம். விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம். போட்டிகள் மார்ச் 18-22 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்பதை மட்டும் சொல்ல முடியும். வீரர்களின் நேரம் ஒதுக்குதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பிசிசிஐயிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்,” என்று சவுத்ரி பிடிஐயிடம் கோலியின் பெயரை குறிப்பிட்டு கூறினார்.

வீரர்கள் இந்தப் போட்டிக்கு செல்வார்களா என்ற கேள்விக்கு, வாரியத்தின் தலைமையகத்தில் இருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி: “வீரர்களின் பெயரை இன்னும் முடிவு செய்யவில்லை. நான்கு அல்லது ஐந்து வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இருப்பினும், பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அப்பெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் கோலி போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிபி விரும்புவதாக கூறினார்.

“கோலி போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிபி விரும்புகிறது. அவர் உலகின் சிறந்த வீரர் என்று கருதுவது புரிந்துகொள்ளத்தக்கது. மேலும், இந்த விளையாட்டுக்கான அகில இந்திய ஒழுங்குமுறைகளை அவர்கள் விரும்புகிறார்கள்.”

“இந்தத் தொடர் அகமதாபாத் வரை நீட்டிக்கப்படும் என்று ஒரு திட்டம் இருப்பதால், புதுப்பிக்கப்பட்ட மைதானத்தில் மூன்றாவது ஆட்டம் முன்மொழியப்பட்டது, பிசிபியின் கோரிக்கையை வாரியம் பரிசீலித்து வருகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மார்ச் 4ம் தேதி முடிவடையும் நிலையில், வீரர்களின் பணிச்சுமையை கருத்தி கொண்டு முடிவு செய்யப்படவுள்ளது.

ஒரு வாரம் கழித்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா மார்ச் 12ம் தேதி தர்மசாலாவில் நடத்தவுள்ளது. இரண்டாவது போட்டி மார்ச் 15ம் தேதி லக்னோவிலும், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி மார்ச் 18ம் தேதி கொல்கத்தாவிலும் நடக்கவுள்ளது.

ஐபிஎல் போட்டிகளும் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ளது. ஒருவேளை டி20 போட்டிகள் டாக்காவில் மார்ச் 18ம் தேதி தொடங்கினால், கோலி இதில் பங்கேற்கும் வாய்ப்பில்லை.

முஜிபுர் ரஹ்மான் நூற்றாண்டு தொடருக்கான தேதிகள் மார்ச் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் இருக்கும் என்று ஒரு பிசிபி வட்டாரம் தெரிவிக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆசியா லெவன் vs உலக லெவன் டி20 டாக்காவில் மார்ச் 18-22 வரை நடக்கும்
  • ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் அணிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை
  • மார்ச் 12 முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் இந்தியா நடத்தவுள்து
தொடர்புடைய கட்டுரைகள்
“நாங்கள் குரங்குகள் அல்ல” - அனுஷ்காவுடன் புகைப்படம் பதிவிட்ட விராட் கோலி!
“நாங்கள் குரங்குகள் அல்ல” - அனுஷ்காவுடன் புகைப்படம் பதிவிட்ட விராட் கோலி!
“எனக்குக் கிடைத்துள்ள அனைத்துக்கும் நன்றி” - லாக்டவுனை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் அனுஷ்கா ஷர்மா!
“எனக்குக் கிடைத்துள்ள அனைத்துக்கும் நன்றி” - லாக்டவுனை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் அனுஷ்கா ஷர்மா!
“கேப்டனாக கங்குலியிடம் கிடைத்த ஆதரவு, தோனி மற்றும் கோலியிடம் கிடைக்கவில்லை” - யுவராஜ் சிங்!
“கேப்டனாக கங்குலியிடம் கிடைத்த ஆதரவு, தோனி மற்றும் கோலியிடம் கிடைக்கவில்லை” - யுவராஜ் சிங்!
கொரோனா: குதிரை சவாரி திறன்களை வெளிக்காட்டிய ரவீந்திர ஜடேஜா!
கொரோனா: குதிரை சவாரி திறன்களை வெளிக்காட்டிய ரவீந்திர ஜடேஜா!
தலை முடியை ஷேவ் செய்த டேவிட் வார்னர்... ஸ்மித் மற்றும் கோலிக்குச் சவால்!
தலை முடியை ஷேவ் செய்த டேவிட் வார்னர்... ஸ்மித் மற்றும் கோலிக்குச் சவால்!
Advertisement