"மோசமாக உள்ளது" - ஐசிசியின் டெஸ்ட் ஜெர்ஸி மாற்றம் குறித்து சோயிப் அக்தர்!

Updated: 05 August 2019 17:11 IST

இங்கிலாந்து நாட்டவரும், ஆஸ்திரேலிய நாட்டவரும் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகள் விளையாடும் போது, வெள்ளை நிற ஜெர்ஸி அணிந்து அதில் பெயர் மற்றும் நம்பருடன் ஆடியுள்ளனர்.

Numbers, Names On Test Jerseys "Awful", Says Shoaib Akhtar
ஐசிசி, டெஸ்ட் விளையாடும் நாடுகள் அவர்களுடைய பெயர் மற்றும் நம்பர்களை ஜெர்ஸியில் பதிவிடும் படி கேட்டுக்கொண்டது. © AFP

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் அக்தர், டெஸ்ட் ஜெர்ஸியில் பெயரும் நம்பரும் பதிவிட்டு ஆட வேண்டும் என்ற ஐசிசி அணியின் புதிய மாற்றத்தை விமர்சித்துள்ளார். இந்த யோசனையை "மோசமானது" என்று அவர் குறிப்பிட்டு அதை திரும்ப பெறும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இவருக்கு முன்பு, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் பிரெட் லீ மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்களின் விருப்பமின்மையை பதிவு செய்தனர். சோயிப் அக்தர் தன் ட்விட்டர் பக்கத்தில், அதிக ஓவர்கள் கொண்ட போட்டியின் தன்மையை இந்த மாற்றம் மாற்றிவிடும் என்று பதிவிட்டுள்ளார்.

"வீரர்களின் பெயன் மற்றும் நம்பர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருக்க வேண்டும் என்பது பார்க்க மோசமாக இருக்கும். இது விளையாட்டின் பாரம்பரியத்தை கெடுக்கிறது. இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்," என்று சோயிப் ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், ஐசிசி டெஸ்ட் விளையாடும் நாடுகள் அவர்களுடைய பெயர் மற்றும் நம்பர்களை ஜெர்ஸியில் பதிவிடும் படி கேட்டுக்கொண்டது. இதை சிலர் ஆதரித்தனர், இன்னும் சிலருக்கு இந்த மாற்றம் பிடிக்கவில்லை என்று கூறினர்.

"இந்த மாற்றம் எதற்கு பயன்படும். பெயரும், நம்பரும் வீரர் அணியும் ஜெர்ஸியின் பின்னால் இருப்பதை எதிர்கிறேன். இது மிகவும் காமெடியாக உள்ளது. @ICC ஐசிசி கொண்டு வந்திருக்கும் மற்ற மாற்றங்கள் பிடித்துள்ளது. ஆனால், இந்த நிலையில் நீங்கள் செய்தது சரியல்ல," என்று பிரெட் லீ ட்விட்டரில் தெரிவித்தார்.

"என்னுடைய மன்னிப்பை நான் திரும்ப பெறுகிறேன். பெயர் மற்றும் நம்பர் இருப்பது குப்பை போல் உள்ளது. எல்லோரும் தொடரை கண்டு மகிழுங்கள்," கில்கிறிஸ்ட் ஆஷஸ் தொடரில் ஆடும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது கூறினார்.

இன்னொரு ட்விட்டில், கில்கிறிஸ்ட், "சிறப்பு. நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். பழைய பாணியில் ஒலித்ததற்கு மன்னிக்கவும். ஆனால், பெயர்கள் மற்றும் நம்பர்களை விரும்பவில்லை." என்றார்.

இந்திய அணியின் ஸ்பின்னர் அஸ்வின், "ஸ்வெட்டர்களிலும் நம்பர்கள் இருக்க  வேண்டுமா என்ன??#ashes2019," என்று ட்விட் செய்திருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“நட்சத்திர வீரர்களை இப்படியா நடத்துவீர்கள்?” - பிசிபியை சாடிய சோயிப் அக்தர்!
“நட்சத்திர வீரர்களை இப்படியா நடத்துவீர்கள்?” - பிசிபியை சாடிய சோயிப் அக்தர்!
"அவர் தலைமுடியைவிட என்னிடம் பணம் அதிகம் இருக்கும்" - சேவாக்கை வம்பிழுத்த அக்தர்!
"அவர் தலைமுடியைவிட என்னிடம் பணம் அதிகம் இருக்கும்" - சேவாக்கை வம்பிழுத்த அக்தர்!
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"இந்து என்பதால் டேனிஷ் கனேரியாவை மோசமாக நடத்தினர்" - சோயிப் அக்தர்!
"இந்து என்பதால் டேனிஷ் கனேரியாவை மோசமாக நடத்தினர்" - சோயிப் அக்தர்!
Advertisement