Listen to the latest songs, only on JioSaavn.com
 

இந்தியப் பெண்ணை திருமணம் செய்யவிருக்கும் க்ளென் மேக்ஸ்வெல்!

Updated: 26 February 2020 18:16 IST

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராமிl புதன்கிழமை வினி ராமனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை வெளிப்படுத்தினார்.

Australias Glenn Maxwell Announces Engagement To Indian-Origin Girlfriend
க்ளென் மேக்ஸ்வெல் தனது காதலி வினி ராமனை கடந்த வாரம் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். © Instagram

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை 2017ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார். இப்போது அவரை நிச்சயம் செய்ததாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் தனது வருங்கால மனைவியுடன் ஒரு படத்தை வெளியிட்டு, அந்த இடுகையை மோதிர ஈமோஜியுடன் தலைப்பிட்டார். வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒரு படத்தை வெளியிட்டு, கடந்த வாரம் க்ளென் மேக்ஸ்வெல் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதாக பதிவிட்டிருந்தார். “கடந்த வாரன் என்னுடைய அபிமான நபர் அவரை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார் #YES,” என்று அவர் தலைப்பிட்டார்.

ஆல்ரவுண்டர், தனது இடது முழங்கையில் ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, தென்னாப்பிரிக்காவின் சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலியாவின் அணியில் இருந்து க்ளென் மேக்ஸ்வெல் வெளியேற்றப்பட்டார்.

இந்த காயம், மேக்ஸ்வெல்லை ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க கட்டாயப்படுத்தியது. இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிப்ரவரி 12ம் தேதி அறிவித்தது.

A post shared by Glenn Maxwell (@gmaxi_32) on

31 வயதான பேட்ஸ்மேன் கடந்த ஆண்டு அக்டோபரில் மன அழுத்தம் காரணமாக தற்காலிக ஓய்வெடுத்தார்.

“என்னுள் ஏற்பட்ட மாற்றத்தை கண்டுபிடித்தவர் என் காதலி தான். அவர் என்னை யாரிடமாவது பேசும் படி பரிந்துரைத்தார். நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டியுள்ளது. நான் இதுகுறித்து பேசத் தொடங்கியது என்னுடைய பாரம் குறைந்தது போல் இருந்தது,” என்று மேக்ஸ்வெல் கூறினார்.

மன அழுத்தத்துடன் இருந்தபோது, தனது ஆரம்ப போராட்டங்களில் தனக்கு ஆதரவாக நின்ற தனது காதலியை ஆஸ்திரேலியர் பாராட்டினார்.

“என்னுடைய மன அழுத்தத்தின் ஆரம்ப நாட்களில் என்னுடன் இருந்து சமாளித்தது என்னுடைய காதலி தான். அது அவ்வளவு எளிதானதாக இல்லை. அதன்பின் நான் மைக்கேல் லாட் என்பவரிடம் நான் பேசத் தொடங்கினேன். அவரை எனக்கு 10 வருடங்களுக்கு மேலாக தெரியும், நான் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நபர் அவர்,” என்றார் மேக்ஸ்வெல்.

பிக் பாஷ் லீக்கில் மேக்ஸ்வெல் ஆடத் தொடங்கினார். அங்கு அவர் மெல்போர்ன் வீரர்களை உரிமையை அடிப்படையாகக் கொண்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • வினி ராமனுடன் நிச்சயதார்த்தம் செய்ததாக க்ளென் மேக்ஸ்வெல் தெரிவித்தார்
  • மேக்ஸ்வெல் வினியுடன் ஒரு படத்தை வெளியிட்டு,அதை மோதிரத்துடன் தலைப்பிட்டார்
  • மேக்ஸ்வெல் தற்போது முழங்கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வருகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
க்ளென் மேக்ஸ்வெல் உடனான ரிலேஷன்ஷிப் ரகசியத்தைப் பகிர்ந்த வினி ராமன்!
க்ளென் மேக்ஸ்வெல் உடனான ரிலேஷன்ஷிப் ரகசியத்தைப் பகிர்ந்த வினி ராமன்!
இந்திய உடையில் வினி ராமனுடன் நிச்சயதார்த்தம் செய்த க்ளென் மேக்ஸ்வெல்!
இந்திய உடையில் வினி ராமனுடன் நிச்சயதார்த்தம் செய்த க்ளென் மேக்ஸ்வெல்!
“பிரம்மிப்பூட்டும்” வருங்கால மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மேக்ஸ்வெல்!
“பிரம்மிப்பூட்டும்” வருங்கால மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மேக்ஸ்வெல்!
இந்தியப் பெண்ணை திருமணம் செய்யவிருக்கும் க்ளென் மேக்ஸ்வெல்!
இந்தியப் பெண்ணை திருமணம் செய்யவிருக்கும் க்ளென் மேக்ஸ்வெல்!
தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்
தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்
Advertisement