ஆஸ்திரேலிய ஓப்பன் : பழைய டென்னிஸ் நினைவுகளை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்!

Updated: 25 January 2019 11:36 IST

2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் நேரத்தில், பழைய டென்னிஸ் நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டெண்டுல்கர்.

Australian Open Fever Grips Sachin Tendulkar, Cricket Great Posts Throwback Tennis Pictures
டென்னிஸ் மீதான காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். © Twitter

சச்சின் டெண்டுல்கர், தனக்கு டென்னிஸ் மீதான காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். 2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் நேரத்தில், பழைய டென்னிஸ் நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டெண்டுல்கர். அதில் "நான் ஸ்போர்ட்ஸை எப்போதும் நிறுத்தியதில்லை. என் கால்களில் ஷூ இல்லையென்றாலும் விளையாடிக் கொண்டுதான் இருந்தேன்" என்று பதிவிட்டு, அதோடு சிறு வயதில் டென்னிஸ் ஆடிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

விம்பிள்டன் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஐசிசியை இணைத்து எவ்வளவு அழகாக டிபன்ஸிவ் ஆடுகிறார் ஃபெடரர்" என்று ட்வீட் செய்திருந்தது. அதனை டெண்டுல்கர் எவ்வளவு "சிறப்பான ஷாட்" என்று ரீ ட்வீட் செய்துள்ளார். மேலும், "டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் குறித்து இருவரும் பரிமாற்றம் செய்து கொள்வோம்" என்று கூறி ஃபெடரர்-யை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

37 வயதான சுவிஸ் வீரர் இளம் வீரரிடம் தோல்வியுற்றார் ஃபெடரர். 20 வயதான சிட்டிஸ்பாஸிடம் 6-7 (11/13), 7-6 (7/3), 7-5, 7-6 (7/5) என்ற கணக்கில் தோற்றார்.

சிட்டிஸ்பாஸ், வியாழனன்று காலிறுதி போட்டியில் நடாலை எதிர்கொள்கிறார். நடால் 5வது ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை எதிர்நோக்கியுள்ளார்.

நடால் ஒரு செட்டையும் இழக்காமல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • சச்சின், சிறு வயதில் டென்னிஸ் ஆடிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்
  • ஃபெடரர் ஆடியதை சிறப்பான ஷாட் என்று ரீ ட்வீட் செய்துள்ளார் சச்சின்
  • பல சந்தர்பங்களில் தான் ஃபெடரரின் ரசிகர் என்பதை பகிர்ந்துள்ளார் சச்சின்
தொடர்புடைய கட்டுரைகள்
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
"தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச வேண்டியிருந்தது" - சச்சின் டெண்டுல்கர்!
"தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச வேண்டியிருந்தது" - சச்சின் டெண்டுல்கர்!
Advertisement