ஆஸி கேப்டனுடன் வாக்குவாதம்: கோலியை வறுத்தெடுத்த ஆஸி ரசிகர்கள்!

Updated: 17 December 2018 16:36 IST

இன்றும் தொடர்ந்த வாதத்தில் கோலி, பெய்ன்  இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு அருகருகே செல்ல, அம்பயர் குறுக்கிட்டு சமாதானப்படுத்தியுள்ளார்.

Australian Fans Attack Virat Kohli On Twitter For Verbal Battle With Tim Paine. Watch Video
பெர்த் டெஸ்ட்டில் நான்காம் நாள் ஆட்டத்தில் கோலி - டிம் பெய்ன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. © Twitter

பெர்த் டெஸ்ட்டில் நான்காம் நாள் ஆட்டத்தில் கோலி - டிம் பெய்ன் இடையே நடைபெற்ற விவாதத்தால், விராட் கோலியை  ஆஸ்திரேலிய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னதாக மூன்றாம் நாள் ஆட்டம் முடியும் போது கோலி மற்றும் பெய்ன் இடையேயான வாதத்தில், முதலில் கோலி ''பெய்னை வீழ்த்திவிட்டால் தொடரை 2-0 என முன்னிலை பெறலாம்'' என்று தெரிவித்தார்.  ``If he mess it up it's 2-0”  என சொல்ல, அதற்கு பெயின்,  "அதற்கு முதலில் நீங்கள் பேட் செய்ய வேண்டும் தல ( Big Head)” என்று கூறியுள்ளார்.

இன்றும் தொடர்ந்த வாதத்தில் கோலி, பெய்ன்  இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு அருகருகே செல்ல, அம்பயர் குறுக்கிட்டு சமாதானப்படுத்தியுள்ளார். அங்கு நடந்த உரையாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பெய்ன்: நேற்று நீங்கள் தானே கோலி தோற்றீர்கள். இன்று ஏன் கூலாக இருக்கிறீர்கள்.

அம்பயர்: வேண்டாம், போதும் பெய்ன்

பெய்ன்: நாங்கள் பேச அனுமதிக்கப்பட வேண்டும்.

அம்பயர்: முடியாது ஆட்டத்தை தொடருங்கள்.. நீங்கள் இருவரும் கேப்டன்கள்

பெய்ன்: நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். வேறு எதுவுமில்லை.

அம்பயர்: டிம் நீங்கள் கேப்டன்

பெய்ன்: அப்படியே கூலாக இருங்கள் விராட்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்து, "விராட் செய்வது முறையற்றது. அவரை யாரும் கேட்காமல் ஆஸ்திரேலியர்களை குறை கூறுகிறீர்கள்" என்று பலர் ட்விட்டரில் தெரிவிக்கின்றனர்.

இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் ஆர்டர் மீண்டும் சொதப்பிய நிலையிலும், இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆடி வருகிறார்கள்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
Advertisement