சொந்த மண்ணில் 41 ஆண்டுகள் கழித்து அதிக போட்டிகள் ஆடும் ஆஸ்திரேலியா!

Updated: 07 May 2019 17:21 IST

ஆஸ்திரேலியா இலங்கைக்கு எதிராக அக்டோபர் 27 முதல் 3 டி20 போட்டிகளையும், நவம்பர் 3 முதல் பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20 போட்டிகளையும் நடத்தவுள்ளது. 

Australia To Play Their Longest Home Season In 41 Years As CA Reveals Schedule
ஆஸ்திரேலிய பெண்கள் அணி இலங்கையுடன் ஒருநாள் , டி20 தொடர்களிலும், இங்கிலாந்து, இந்தியாவுடன் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக முத்தரப்பு தொடரிலும் ஆடவுள்ளது. © AFP

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1970க்கு பிறகு மிக நீண்ட நாட்கள் சொந்த மண்ணில் ஆடவுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர்களில் ஆடவுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் சீசனை ஆடவுள்ளது. பாகிஸ்தானுடன் பிரிஸ்பெனில் நவம்பர் 21, 2019 மற்றும் அடிலெய்டில் 29, நவம்பர் 2019 ஆகிய தேதிகளில் இரண்டு டெஸ்ட்களிலும், அதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக டிசம்பர் 12ல் பெர்த்திலும், டிசம்பர் 26 பாக்ஸிங் டே போட்டியில் மெல்பெர்னிலும், ஜனவரி 3, 2020 சிட்னியிலும் டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது.

இந்த போட்டிகள் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளன. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 9 நாடுகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். 

ஆஸ்திரேலியா இலங்கைக்கு எதிராக அக்டோபர் 27 முதல் 3 டி20 போட்டிகளையும், நவம்பர் 3 முதல் பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20 போட்டிகளையும் நடத்தவுள்ளது. 

எப்போதும் சாதரணமாக ஆஸ்திரேலியா ஜனவரியில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் ஆடும். ஆனால் இந்த முறை அப்படி ஆடவில்லை அதற்கு பதிலாக வேறு தேதிகளை முடிவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இந்தியாவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச்சில் நியூசிலாந்துடன் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. 41 ஆண்டுகளில் இதுதான் மிகப்பெரிய சொந்த ஊர் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

1979ல் பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா கடைசியாக பெர்த்தில் டெஸ்ட் போட்டியில் ஆடியது. 

இது குறித்து பேசிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் பீட்டர் ரோச் ''9 டெஸ்ட் ஆடும் நாடுகளுக்கும் இதேபோல் அட்டவணை உள்ளது'' என்றார்.

"ஐசிசியின் சுற்றுப்பயண விதிகளின் படி நேரம்பார்த்து தொடர்கள் முடிவு செய்யப்படும்" என்றும் கூறினார். 

ஜனவரியில் நடக்கும் ஒருநாள் போட்டி தொடர்களுக்கு மாற்றை முடிவு செய்ய நேரம் தேவை. ஐசிசி விதிகளின் படி அதனை செயல்படுத்துவோம் என்றும் பீட்டர் ரோச் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய பெண்கள் அணி இலங்கையுடன் ஒருநாள் , டி20 தொடர்களிலும், இங்கிலாந்து, இந்தியாவுடன் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக முத்தரப்பு தொடரிலும் ஆடவுள்ளது.

டெஸ்ட்

பாகிஸ்தான்

பிரிஸ்பென் - நவம்பர் 21-25

அடிலெய்ட் - நவம்பர் 29-டிசம்பர் 3

நியூசிலாந்து 

பெர்த் - டிசம்பர் 12-16

மெல்பெர்ன் - டிசம்பர் 26-30

சிட்னி - ஜனவரி 3-7, 2020

ஒருநாள் தொடர்

நியூசிலாந்து

மார்ச் 13  - பிரிஸ்பென்

மார்ச் 15  - சிட்னி

மார்ச் 20  - ஹோபர்ட்

டி20 தொடர்

இலங்கை

அக்டோபர் 27 - அடிலெய்ட்

அக்டோபர் 30 - பிரிஸ்பென்

நவம்பர் 1 - மெல்பெர்ன்

பாகிஸ்தான்

நவம்பர் 3 - சிட்னி

நவம்பர் 5 - காம்பெரா

நவம்பர் 8 - பெர்த்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு 'குறும்பான பதிவு' என பதிலளித்த ஆர்ச்சர்!
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஷஸ் உயிர்கொடுக்கிறது - கங்குலி
டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஷஸ் உயிர்கொடுக்கிறது - கங்குலி
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
Advertisement