Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?

Updated: 25 February 2020 18:10 IST

பங்களாதேஷ் நாட்டின் நிறுவனத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படும்.

Asia XI vs World XI: Virat Kohli Among Six Indian Players Named In Asia XI For T20I Series vs World XI: Report
டி20 தொடரில் விராட் கோலி பங்கேற்பது உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது. © AFP

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஏற்பாடு செய்துள்ள ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால். கோலியின் வருகை இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை. பங்களாதேஷ் நாட்டின் நிறுவனத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படும். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி ஒருநாள் போட்டியில், ஒரே நாளில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் விளையாடவுள்ள நிலையில், மார்ச் 18ம் தேதி ஆட்டத்திற்கு கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரிடமிருந்து பிசிபி உறுதிக்காக காத்திருக்கிறது.

இந்த இரண்டு போட்டிகளுக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி கோலி, முகமது ஷமி, ஷிகர் தவான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிபிக்கு அனுப்பியதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டிருந்தது. 

எதிர்பார்த்தபடி, ஆசியா லெவன் அணியில் எந்த பாகிஸ்தான் வீரரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ இணை செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் முன்பு ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்திருந்தார்.

"ஆசியா லெவன் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, இரு நாடுகளும் ஒன்றிணைவது குறித்து எந்த பேச்சும் இல்லை" என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதில் பிஸியாக இருப்பதால் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் விளையாடவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

"உலக லெவன் மற்றும் ஆசியா லெவன் இடையேயான டி20 போட்டிகள் மார்ச் 16-20 முதல் திட்டமிடப்பட்டிருந்தன, பிஎஸ்எல் 2020 மார்ச் 22ம் தேதியுடன் முடிவடையும். இரண்டு தொடர்களின் தேதிகளையும் மாற்ற முடியாது என்பதால், எங்கள் வருத்தத்தை பிசிபிக்கு வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் வழங்கினோம். அவர்கள் அதை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டனர்,” என்று பிசிபி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

"பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர்களையும், பின்பற்றுபவர்களையும் தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைகள் திரிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது." என்று அவர் கூறினார்.

அணிகள்:

ஆசியா லெவன்: விராட் கோலி *, கே.எல்.ராகுல் *, ரிஷப் பன்ட், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷிகர் தவான், தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகூர் ரஹீம், திசாரா பெரேரா, ரஷீத் கான், முஸ்தாபிசுர் ரஹ்மான், சந்தீப் லாமிச்சேன், லசித் மலிங்கா, முஜீப் உர் ரஹ்மான்

உலக லெவன்: அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் கெய்ல், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ரோஸ் டெய்லர், ஜானி பேர்ஸ்டோவ், கீரோன் பொல்லார்ட், அடில் ரஷீத், , ஷெல்டன் கோட்ரெல், லுங்கி என்ஜிடி, ஆண்ட்ரூ டை, மிட்செல் மெக்லெனகன். (பயிற்சியாளர்: டாம் மூடி)

குறிப்பு: (*) - ஒரு போட்டிக்கு; கோலியின் தேர்வு உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆசியா லெவன் vs உலக லெவன் டி20 டாக்காவில் மார்ச் 18-22 வரை நடக்கும்Asia XI
  • ஆசியா லெவன் vs உலக லெவன் டி20 போட்டிகள் ஆடவுள்ளன
  • கோலி, கே.எல்.ராகுல் பிசிபிக்கு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்!
“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
விராட் கோலியை டிக்டாக்கில் டூயட் செய்யும்படி அழைத்த டேவிட் வார்னர்!
விராட் கோலியை டிக்டாக்கில் டூயட் செய்யும்படி அழைத்த டேவிட் வார்னர்!
அக்‌ஷய் குமாரின் பாடலுக்கு நடனமாடிய வார்னர்... சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்ட கோலி!
அக்‌ஷய் குமாரின் பாடலுக்கு நடனமாடிய வார்னர்... சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்ட கோலி!
தாயையும் டிக்டாக்கில் பார்ட்னராக சேர்த்துக்கொண்ட டேவிட் வார்னர்!
தாயையும் டிக்டாக்கில் பார்ட்னராக சேர்த்துக்கொண்ட டேவிட் வார்னர்!
Advertisement