ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு 'குறும்பான பதிவு' என பதிலளித்த ஆர்ச்சர்!

Updated: 20 August 2019 13:17 IST

உலகக் கோப்பையை வெல்ல உதவிய ஆர்ச்சர், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆன்டர்சனின் காயத்துக்கு பதிலாக அழைக்கப்பட்டார்.

Jofra Archer Reacts To Fan
இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் அறிமுக டெஸ்ட் மறக்க முடியாத டெஸ்ட்டாக மாறியுள்ளது. © AFP

இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் அறிமுக டெஸ்ட் மறக்க முடியாத டெஸ்ட்டாக மாறியுள்ளது. மழையால் குறிக்கிட்டுக்குள்ளான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தது. இதில் ஆர்ச்சர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி தனது ஷார்ட் பிட்ச் பந்துகளால் ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்தார். 92 மைல் வேகத்தில் வீசப்பட்ட பந்து ஸ்மித்தை தாக்கியது. அதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதற்கு பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில் ஆர்ச்சர் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வயதான நபர் சோஃபாவிலிருந்து கைத்தடியுடன் எழுந்திருப்பது போலவும், பின் தடுமாறிவிழுவது போலவும் அமைந்திருந்தது. இதனை குறுப்பான பதிவு என்று குறிப்பிட்டிருந்தார் ஆர்ச்சர்.

ஆர்ச்சரின் இந்த பதிவுக்கு ஒருவர் தலையில்லாத ஒருவர் எழுந்திருப்பது போன்ற பதிவை பதிலாக அளித்து ஸ்மித் இப்படித்தான் எழுந்திருப்பார் என்று கூறியிருந்தார்.

உலகக் கோப்பையை வெல்ல உதவிய ஆர்ச்சர், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆன்டர்சனின் காயத்துக்கு பதிலாக அழைக்கப்பட்டார். ஆர்ச்சர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 3-32 என்று அபாரமாக வீசினார் ஆர்ச்சர்.

ஆனால் ஆர்ச்சரின் அபாரப்பந்து வீச்சை மழை வீணடித்தது. மழையால் குறிக்கிட்டுக்குள்ளான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தது.

24 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். 

ஆர்ச்சர் தனது ஷார்ட் பிட்ச் பந்துகளால் ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்தார். 92 மைல் வேகத்தில் வீசப்பட்ட பந்து ஸ்மித்தை தாக்கியது. அதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஷஸ் 2019: ஜோஃப்ரா ஆர்ச்சரை சீண்டிய ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றம்!
ஆஷஸ் 2019: ஜோஃப்ரா ஆர்ச்சரை சீண்டிய ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றம்!
ஆர்ச்சரை கண்டு நான் பயப்படவில்லை - ஸ்மித்
ஆர்ச்சரை கண்டு நான் பயப்படவில்லை - ஸ்மித்
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு 'குறும்பான பதிவு' என பதிலளித்த ஆர்ச்சர்!
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
Advertisement