"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்

Updated: 20 August 2019 15:28 IST

இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் அறிமுக டெஸ்ட் மறக்க முடியாத டெஸ்ட்டாக மாறியுள்ளது. மழையால் குறிக்கிட்டுக்குள்ளான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தது.

Jofra Archer Won
ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம் - பென் ஸ்டோக்ஸ் © AFP

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 2019 ஆஷஸ் பற்றி கூறும் போது ''ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம். இது விளையாட்டின் ஒரு அங்கம். ஒரு வீரரை களத்தில் நீண்ட நேரம் ஆடவிடாமல் செய்வதற்கான உத்தி. இதனை ஆர்ச்சர் சிறப்பாக செய்கிறார்" என்றார். இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் அறிமுக டெஸ்ட் மறக்க முடியாத டெஸ்ட்டாக மாறியுள்ளது. மழையால் குறிக்கிட்டுக்குள்ளான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தது. இதில் ஆர்ச்சர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி தனது ஷார்ட் பிட்ச் பந்துகளால் ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்தார். 92 மைல் வேகத்தில் வீசப்பட்ட பந்து ஸ்மித்தை தாக்கியது. அதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். 

ஒரு பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனை பயமுறுத்தும் ஒரு பந்தை வீசிவிட்டால் இனி அந்த பந்தை வீசமாட்டேன் என்று ஒருபோதும் சொல்லமாட்டார் என்று ச்டோக்ஸ் தெரிவித்தார்.

இங்கு கவனிக்க வேண்டியது. அப்படி ஒரு பந்து உங்களுக்கு சாதகமாக உள்ளது என்றால் அதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஹெட்டிங்லியில் நடக்கும் முன்ன்றாவது டெஸ்ட்டில் ஸ்மித் ஆடமாட்டார் என்று தெரிகிறது. முன்னதாக ஆர்ச்சர் அவரது கையிலிம், பின்னர் பின் கழுத்திலும் பவுன்ஸரால் தாக்கினார். 

இந்த பந்துகள் அனைத்துமே முறையாக வீசப்பட்ட பந்துகள், அதனால் ஆர்ச்சர் லீட்ஸிலும் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.

முதல் டெஸ்ட்டில் 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றதிலிருந்து மீண்டுவர ஆர்ச்சரின் பந்துவீச்சு உதவும் என ஸ்டோக்ஸ் கூறினார். 

இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 29 ஓவர்களை வீசிய ஆர்ச்சருக்கு தனது கடைசி 8 ஓவர்கள் மறக்க முடியாததாக அமைந்திருக்கும் என்றார்.

ஆர்ச்சர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செய்ததை போலவே 2013ல் மிட்செல் ஜான்சன் இங்கிலாந்தை மிரட்டினார் என்றார். ஆர்ச்சரை அணிக்கு தேர்வு செய்தது சிறந்த முடிவு என்றார்.

இந்த போட்டியில் சதமடித்த ஸ்டோக்ஸ் தனக்கு பந்துவீச்சு பொறுப்பு கூடியதால் ஆறாம்நிலை வீரராக களமிரங்குவதாக கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஷஸ் 2019: ஜோஃப்ரா ஆர்ச்சரை சீண்டிய ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றம்!
ஆஷஸ் 2019: ஜோஃப்ரா ஆர்ச்சரை சீண்டிய ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றம்!
ஆர்ச்சரை கண்டு நான் பயப்படவில்லை - ஸ்மித்
ஆர்ச்சரை கண்டு நான் பயப்படவில்லை - ஸ்மித்
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு 'குறும்பான பதிவு' என பதிலளித்த ஆர்ச்சர்!
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
Advertisement