தனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர்

Updated: 19 July 2018 16:41 IST

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட யூத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Arjun Tendulkar Out For Duck On Debut In Under-19 Youth Test
© AFP

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜுன் டெண்டுல்கர் இலங்கை யூத் அணியுடன் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆகி அதிர்ச்சி அளித்தார்.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட யூத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்போதே அர்ஜூனின் தேர்வு குறித்து சலசலப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கைக்கு யூத் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், முதல் நாள் ஆட்டத்தில் தனது முதல் சர்வதேச கைப்பற்றி முற்றுப்புள்ளி வைத்த அர்ஜூன், இப்போட்டியில் மொத்தமாக 11 ஓவர்கள் பவுலிங் செய்து, 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.

 

 

இதில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய யூத் அணிக்கு தாய்டே, பதோனி ஆகியோர் சதம் அடித்தனர். இதில் 9வது வீரராக களமிறங்கிய அர்ஜூன் 11 பந்துகளை எதிர்கொண்டு ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்த இன்னிங்சில் இந்திய அணி 584 ரன்கள் குவித்து, 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இதில் அர்ஜுன் டெண்டுல்கர் 'டக் அவுட்' ஆனது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கரும் இதே போல தனது முதல் போட்டியில் 'டக் அவுட்' ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • அர்ஜுன் டெண்டுல்கர் யூத் 19 அணியில் விளையாடி வருகிறார்
  • இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆனார் அர்ஜூன் டெண்டுல்கர்
  • இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 584 ரன்கள் குவித்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
சர்ரே பேட்ஸ்மேனை வீழ்த்திய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்
சர்ரே பேட்ஸ்மேனை வீழ்த்திய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : பயிற்சி ஆட்டத்தில் பவுலிங் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர்!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : பயிற்சி ஆட்டத்தில் பவுலிங் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர்!
தனது முதல் டெஸ்ட் போட்டியில்
தனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் சர்வதேச விக்கெட்… வினோத் காம்ப்ளி உருக்கம்!
அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் சர்வதேச விக்கெட்… வினோத் காம்ப்ளி உருக்கம்!
அண்டர் 19க்கான  இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் அர்ஜுன்
அண்டர் 19க்கான இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் அர்ஜுன்
Advertisement