
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் கலந்து கொண்டுள்ளார்.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முன்னிலையில் நடைப்பெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது, இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பவிலிங் வீசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
அர்ஜூன் டெண்டுல்கரின் பவுலிங்கை முரள் விஜய் எதிர்கொள்வது போன்ற வீடியோ காட்சி சமூக வளைத்தளத்தில்; வைரலாகி உள்ளது.
— Melinda Farrell (@melindafarrell) July 22, 2017
19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் அர்ஜூன் டெண்டுல்கர், அவ்வப்போது சீனியர் அணியின் பயிற்சி ஆட்டத்தில் பங்கு கொள்வது வழக்கமாக உள்ளது.
இதற்கு முன்பு, 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைப்பெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அர்ஜூன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, 2017 ஆம் ஆண்டு பெண்கள் ஐசிசி உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், வேதா கிருஷ்ணாமூர்த்திக்கு பவுலிங் வீசினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லும் முனைப்பில் இந்திய அணி க.ளம் இறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது