இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு அனுஷ்காவின் ஸ்பெஷல் வாழ்த்து!

Updated: 21 January 2019 21:30 IST

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

India vs Australia: Anushka Sharma Posts Special Message For Virat Kohli, Team India After Historic ODI Series Win
அனுஷ்கா ஷர்மா, ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்றதற்காக கோலியையும் இந்திய அணியையும் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். © AFP

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான தொடரை முதல்முறையாக இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி போட்டியில் தோனி 87, ஜாதவ் 61, கோலி 46 என முன் வரிசை வீரர்களின் ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றிக்கு பாலிவுட் நடிகையும், இந்திய கேப்டன் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில், ''இது மறக்க முடியாத மற்றும் சிறப்பான சுற்றுப்பயணம். இந்த வெற்றியை பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.

இந்திய அணி 16 ஓவரில் 59 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்த இக்கட்டான சூழலில் தோனி ஆட வந்தார். இந்திய கேப்டன் கோலியுடன் இணைந்து 54 ரன்களும், கேதர் ஜாதவுடன் 121 ரன்களும் எடுத்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்து செல்ல உதவினார். 

சாஹலுக்கு முதல்முதலாக இந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது அவர் சிறப்பாக பந்து வீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு சுழற்பந்துவீச்சாளரின் சிறப்பான பந்துவீச்சாக இது ஆஸி மண்ணில் பதிவானது.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலிக்கும், இந்திய அணிக்கும் வாழ்த்து தெரிவித்தார் அனுஷ்கா
  • ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
  • கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
Advertisement