"கோலியின் கவனசிதறலுக்கு அனுஷ்கா எப்போதும் காரணமாக மாட்டார்" - சானியா மிர்ஸா

Updated: 05 October 2019 09:34 IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்த சானியா மிர்ஸா, தன்னுடைய கணவரின் கவன சிதறலுக்கு அவர் தான் காரணம் என்று பலமுறை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Virat Kohli Doesn
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரின் உதாரணத்தை சானியா எடுத்துக் கொண்டார் சானியா மிர்ஸா. © PTI

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்த சானியா மிர்ஸா, தன்னுடைய கணவரின் கவன சிதறலுக்கு அவர் தான் காரணம் என்று பலமுறை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஒரு விளையாட்டு வீராங்கணையாக இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் சானியாவும் பாதிக்கப்பட்டு வருகிறார் மற்றும் வியாழக்கிழமை மும்பையில் நடந்த இந்தியா பொருளாதார உச்சி மாநாட்டில் பேசினார், பொதுவாக பெண்களை ஒரு கவனச்சிதறலாக பார்க்கிறவர்களை அவர் தாக்கி பேசினார். தனது கருத்தை அங்கே சொல்ல, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரின் உதாரணத்தை சானியா எடுத்துக் கொண்டார். வீரர்கள் மோசமாக செயல்படும்போதெல்லாம் மனைவிகள் அல்லது தோழிகளைக் குறை கூறும் பழக்கம் "அர்த்தமில்லை" என்று சானியா கூறினார்.

"விராட் கோலி ரன் எடுக்கவில்லை என்றார், அனுஷ்காவை குறை கூறுவார்கள். ஆனால், அவர் செய்ய என்ன உள்ளது. இது அர்த்தமற்றது," என்றார் சானியா மிர்ஸா.

"எங்கள் கிரிக்கெட் அணி உட்பட பல முறை மற்றும் பல அணிகளில் மனைவிகள் அல்லது தோழிகள் சுற்றுப்பயணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை, ஏனெனில் வீரர்கள் திசைதிருப்பப்படுவார்கள்."

"இதன் அர்த்தம் என்ன? ஆண்களை இவ்வளவு திசைதிருப்பப் பெண்கள் என்ன செய்கிறார்கள்?" என்று மிர்ஸா கேட்டார்.

சானியா மிர்ஸா கடைசியாக 2017ம் ஆண்டில் சீனா ஓபனில் விளையாடினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது 2020 ஜனவரியில் சர்வதேச அரங்கிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.

"நான் பயிற்சி செய்யத் தொடங்கினேன், ஜனவரி மாதத்திற்குள் மீண்டும் வர முயற்சிக்க வேண்டும் என்பதே திட்டம். எனது உடல் என்னை ஆதரிக்கும் என்று நம்புகிறேன். என் உடல் என்னை அனுமதித்து, எனது சிறந்த மட்டத்தில் போட்டியிட அனுமதித்தால், நான் போட்டியிட முடியும் என்று நான் நினைக்கிறேன், "என சானியா மிர்சா என்டிடிவியுடன் ஒரு பிரத்யேக பேட்டியில் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஆண் குழந்தை இஷானைப் பெற்றெடுத்த நான்கு மாதங்களில் 26 கிலோ எடை இழந்ததாக சமீபத்தில் சானியா மிர்சா ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.

விராட் கோலியைப் பொருத்தவரை, அவர் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்துகிறார்.

முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நடந்து வருகிறது.

2ம் நாள் ஆட்டத்தின் முடிவில் தென்னாப்பிரிக்கா மூன்று விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள், 463 ரன்கள் வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் இந்தியா முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
Advertisement