விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!

Updated: 13 February 2020 18:11 IST

முகமது ஷமி பதிவிட்ட புகைப்படத்தில் அனுஷ்கா ஷர்மா தன் கணவர் விராட் கோலி மற்றும் அணி வீரர்களுடன் நேரம் கழிப்பதை காண முடிந்தது.

Anushka Sharma Joins Virat Kohli And His Teammates On A Trip To Putaruru
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் தற்போது தரமான நேரத்தை ஒன்றாக செலவழித்து வருகின்றனர். © Instagram@mdshami.11

விரால் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தங்களுக்கான நேரத்தை செலவழித்து வருகிறார்கள். வியாழக்கிழமை, இந்திய அணியினர், புட்டாருருவில் உள்ள ப்ளூ ஸ்பிரிங்ஸில் தங்களுடைய விடுமுறை நாளை கொண்டாடினர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை முகமது ஷமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில், அனுஷ்கா ஷர்மா தன் கணவர் விராட் கோலி மற்றும் வீரர்களுடன் நேரம் கழிப்பதை காண முடிந்தது.

 “ப்ளூ ஸ்பிரிங்ஸில் நீண்ட நடை மற்றும் அணியினருடன் மிகவும் வேடிக்கையாக நேரம், டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டீம் இந்தியா ஒரு நாளை இப்படிதான் கழித்தது," என்று பிசிசிஐ அணியினரின் புகைப்படத்துடன் பதிவிட்டது.

டெஸ்ட்டில் சிறந்தவர்களான விருத்திமான் சாஹா, சதேஷ்வர் புஜாரா, ஆர் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் ஏற்கனவே நியூசிலாந்தில் இருக்கும் அணியுடன் இணைந்துள்ளனர். மேலும், இளம் வீரர்களான ரிஷப் பன்ட், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தொடக்க வீரர்களான சும்பன் கிஸ் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரும் படத்தில் காணப்பட்டனர்.

நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிராக டீம் இந்தியா மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தை செடோன் பார்க்கில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றனர். ஆனால், நியூசிலாந்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

விராட் கோலி வழிநடத்தும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 360 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 60 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

முதல் முறையாக பிங்க் பால் டெஸ்ட்டில் விளையாடிய இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக வென்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கும்
  • டீம் இந்தியா ப்ளூ ஸ்பிரிங்ஸின் இயற்கை அழகை ரசிக்கச் சென்றது
  • ஷமி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் படங்களை வெளியிட்டார்
தொடர்புடைய கட்டுரைகள்
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
Advertisement