"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!

Updated: 23 August 2019 17:34 IST

கோலி மற்றும் ரிச்சர்ட்ஸ் இடையேயான உரையாடலில் இரண்டாவது பாகத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா தன்னை "சரியான பாதை"யில் அழைத்து சென்றார் என்று கூறியுள்ளார்.

Virat Kohli Says Anushka Sharma Biggest Blessing In His Life Apart From Cricket
2017ம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா திருமணம் செய்து கொண்டனர். © Instagram

மேற்கிந்திய தீவுகளின் லெஜண்ட்டான விவியன்  ரிச்சர்ட்ஸுடனான உரையாடலில் தன்னுடைய வெற்றிக்கு மனைவி அனுஷ்கா தான் காரணம் என்று விராட் கோலி கூறியுள்ளார். 3 நிமிடம் மற்றும் 50 வினாடிகள் கொண்ட வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கோலி மற்றும் ரிச்சர்ட்ஸ் இடையேயான உரையாடலில் இரண்டாவது பாகத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா தன்னை "சரியான பாதை"யில் அழைத்து சென்றார் என்று கூறியுள்ளார். உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான இந்திய அணியை விராட் கோலி வழநடத்தி வருகிறார். இந்த அணி இப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. 

"முன்பை விட இப்போது நீங்கள் சிறப்பாக ஆடுகிறீர்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்க விரும்புபவர்களை எண்ணி சந்தோஷப்படுகிறார்கள், இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அது போன்று. இன்னும் சில அந்த அளவுக்கு செய்திருக்க மாட்டார்கள். ஆனால், நீங்கள் நாணயத்தின் இரு பக்கத்தையும் பாராட்டுகிறீகளே, " என்று ரிச்சர்ட்ஸ் கோலியின் திருமண வாழ்க்கையை குறிப்பிட்டு கேட்டார்.

"கிரிக்கெட்டில் இருப்பதை தவிர்த்து, இது வாழ்க்கையின் மிக பெரிய வரம். சரியான ஒருவரை தேர்வு செய்வது. தன்னுடைய வேலையில் சரியாக செய்யக் கூடியவர். எனக்கான இடத்தை புரிந்துகொள்பவர். என்னை சரியான பாதையில் வழிநடத்துபவர்," என்றார் கோலி.

"நாங்கள் ஒன்றாக இருப்பதிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் சரியானதைச் செய்ய நீங்கள் தயாராக இருந்தால், கடினமான வேலைகளை செய்து, அதோடு நிற்க வேண்டும். ஃபீல்டுக்கு வெளியில் இதை கடைபிடித்தால், களத்திலும் அதையே செய்ய உங்கள் ஆளுமையை உருவாகும் என்று நினைக்கிறேன்" என்றார் கோலி.

இந்த வீடியோவின் முதல் பாகத்தில் இவர்கள் இருவரும், பவுன்ஸரகள் குறித்து பேசினார்கள்.

அந்த 3 நிமிடம் மற்றும் 17 வினாடிகள் வீடியோவில் கோலி, ஒருமுறை சரிந்தால் அதற்கு கவலை கொள்வதில்லை. ஆனால், அடுத்த முறை அந்த பந்து பவுலரை தாண்டி செல்ல வேண்டும் என்று நினைப்பதாக கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
Advertisement