"கும்ப்ளேவை தேர்வுக்குழு தலைவராக்குங்கள்" - சேவாக்

Updated: 22 August 2019 11:49 IST

இந்திய முன்னாள் துவக்க வீரர் சேவாக் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு முன்னாள் பயிற்சியாளரும், வீரருமான அனில் கும்ப்ளேயின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

Anil Kumble Should Be BCCIs Chairman Of Selectors, Says Virender Sehwag
2017 பயிற்சியாளருக்கான தேர்வுக்கு சேவாக் பெயரும் இருந்தது. இந்தமுறை சேவாக் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. © AFP

இந்திய முன்னாள் துவக்க வீரர் சேவாக் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு முன்னாள் பயிற்சியாளரும், வீரருமான அனில் கும்ப்ளேயின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். ஏனெனில் அவருக்கு இந்திய வீரர்களுக்கு அவர்களோடு விளையாடி ஆலோசனை வழங்கிய சச்சின், கங்குலி, ட்ராவிட்டுடன் நல்ல பழக்கம் உள்ளது என்று கூறியுள்ளார். 

தற்போது தேர்வுக்குழு தலைவராக உள்ள எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு வெறும் 13 டெஸ்ட் ஆடிய அனுபவமே உள்ளது. 

"நான் 2007-08 ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்த போது உன்னை அடுத்த 2 தொடரில் நிக்க மாட்டோம் என்று நம்பிக்கை அளித்தார். அதுதான் ஒரு வீரருக்கு தேவை" என்றார் சேவாக்.

"பிசிசிஐ இந்தப் பதவிக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் தர வேண்டும். இந்த தொகையை அதிகப்படுத்தினால் இதில் நிறைய வீரர்கள் இடம்பெற முன்வருவார்கள்" என்றார்.

நீங்கள் இந்த பதவிக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, "நான் அதிகப்படியான கட்டுப்பாடுகளை விரும்ப மாட்டேன்" என்றார்.

2017 பயிற்சியாளருக்கான தேர்வுக்கு சேவாக் பெயரும் இருந்தது. இந்தமுறை சேவாக் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.

"சென்ற முறை பிசிசிஐ செயலாளர் கேட்டுக்கொண்டதன் பெயரில் விண்ணப்பித்தேன்" என்றார். 

மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் ஆடும் 11 வீரர்கள் குறித்த கேள்விக்கு, "ரஹானேயுடன் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களை வைத்து ஆட வேண்டும்" என்றார்.

"ரஹானே 5ம் நிலை வீரராக இறங்கலாம். 4 பந்துவீச்சாளர்கள் போதும் என்று முடிவெடுத்தால் ரோஹித்தும் சேர்த்து களமிறங்கலாம்" என்றார்.

ஊக்கமருந்து சோதனை குறித்த கேள்விக்கு, "நான் பல ஊக்க மருந்து சோதனைகளை எடுத்திருக்கிறேன். உள்ளூர் போட்டிகளிலும் இது நடத்தப்படும். இது குறிப்பிட்ட நாளில் எடுக்கப்படுவது அப்படி இருக்கும் போது இதை எப்போது எடுப்பார்கள் என்று தெரியாது. அது சில சமயங்களில் எதிர்மறையாக முடிய வாய்ப்புள்ளது. முன்கூட்டியே எனக்கு உணர்த்தப்படுவதால் எனக்குன் இதில் சிக்கல் இல்லை" என்றார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அவர் தலைமுடியைவிட என்னிடம் பணம் அதிகம் இருக்கும்" - சேவாக்கை வம்பிழுத்த அக்தர்!
"அவர் தலைமுடியைவிட என்னிடம் பணம் அதிகம் இருக்கும்" - சேவாக்கை வம்பிழுத்த அக்தர்!
"யுவராஜ் சிங், நான், சேவாக் 2015 உலகக் கோப்பையை விளையாடியிருக்க வேண்டும்" - ஹர்பஜன் சிங்
"யுவராஜ் சிங், நான், சேவாக் 2015 உலகக் கோப்பையை விளையாடியிருக்க வேண்டும்" - ஹர்பஜன் சிங்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
"நிஜ வாழ்க்கையில் சதமடிக்க நான் பிரார்த்திக்கிறேன்" - கும்ளேவை வாழ்த்திய சேவாக்
"நிஜ வாழ்க்கையில் சதமடிக்க நான் பிரார்த்திக்கிறேன்" - கும்ளேவை வாழ்த்திய சேவாக்
Advertisement