"அப்ரிடி அறைந்தார் ஆமிர் ஒப்புக்கொண்டார்" - சூதாட்டம் பற்றி அப்துல் ரஸாக்

Updated: 13 June 2019 11:33 IST

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆமிர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அப்போதைய ஒருநாள் கேப்டன் அப்ரிடி கன்னத்தை அறைந்து கேட்டதும் தான் ஒப்புக்கொண்டார் என்று கூறியுள்ளார். 

Mohammad Amir Confessed To Spot Fixing After Being Slapped By Shahid Afridi, Says Abdul Razzaq
ஆமிர் 5 வருடம் சூதாட்ட புகாரில் தடை விதிக்கப்பட்டார். © AFP

பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் அப்துல் ரஸாக் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் பற்றி கூறிய கருத்து வைரலாகியுள்ளது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆமிர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அப்போதைய ஒருநாள் கேப்டன் அப்ரிடி கன்னத்தை அறைந்து கேட்டதும் தான் ஒப்புக்கொண்டார் என்று கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் வாரியம் உலக அளவில் பாகிஸ்தானின் பெயரை கெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆமிர் 5 வருடம் சூதாட்ட புகாரில் தடை விதிக்கப்பட்டார். அதற்கு முன் அப்ரடியை அறையில் சந்தித்தார். அப்போது அவர் ஓங்கி கன்னத்தில் அறைந்தார், அதன் பின் தான் ஆமிர் ஒப்புக் கொண்டார் என்றார்.

"இந்தச் சர்ச்சையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே விசாரித்து ஓராண்டு தடை விதித்திருக்கலாம். ஐசிசி வரை கொண்டு சென்று நாட்டின் பெயரை கெடுத்துவிட்டது" என்றார்

ஆமிர் தவிர்த்தி ஆசிப் மற்றும் பட் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டது. அவர்களும் தற்போது கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளனர். ஆமிர் தற்போது 2019 உலகக் கோப்பையில் ஆடிவருகிறார்.

சல்மான் பட சூதாட்டத்தில் லார்ட்ஸ் டெஸ்ட்டுக்கு முன்பாகவே ஈடுபட்டது எனக்கு தெரியும் என்றார்.

"நான் அப்போது அப்ரிடியிடம் தெரிவித்தேன். சில விஷயங்கள் தவறாக இருப்பதாக கூறினேன். மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அணியின் உத்திகளுக்கு எதிராக ஆடினார். ஓவரில் 3 பந்துகளை ஆடிவிட்டு பின் எனக்கு ஸ்ட்ரைக் தருவார். அதுவும் பெரிதாக ரன் குவிக்காமல் இதனாலேயே நான் கோபப்பட்டு அவரிடன் ஸ்ட்ரைக் தரும் படி பேசினேன். கேட்கவில்லை அதே வேகத்தில் இருந்ததால் அவுட் ஆனேன்" என்றார் ரஸாக்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அப்போது நான் 22 பேருக்கு எதிராக விளையாடினேன்" - சூதாட்டம் குறித்து சோயிப் அக்தர்
"அப்போது நான் 22 பேருக்கு எதிராக விளையாடினேன்" - சூதாட்டம் குறித்து சோயிப் அக்தர்
"இது நடக்கும் என்று தெரியும்" - முகமது அமீர் ஓய்வு குறித்து மிக்கி ஆர்தர்!
"இது நடக்கும் என்று தெரியும்" - முகமது அமீர் ஓய்வு குறித்து மிக்கி ஆர்தர்!
27 வயதில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்
27 வயதில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்
நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!
நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
Advertisement