"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" - '3டி' ட்விட் குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத்!

Updated: 22 July 2019 14:48 IST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணியை அறிவித்தபோது,  எம்எஸ்கே பிரசாத் ராயுடு பதிவிட்ட ட்விட் "சரியான நேரத்தில்" இருந்ததாக கூறினார். மேலும், ட்விட்டை பாராட்டினார் பிரசாத்.

Ambati Rayudu
ஜூலை 3 ஆம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற போவதாக அறிவித்தார். © AFP

2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படாததை அடுத்து அவர் ஓய்வை அறிவித்தார். உலகக் கோப்பை நேரத்தில் அவர் செய்த ட்விட் எம்எஸ்கே பிரசாத்-ஐ கோபமூட்டாமல், சிரிக்க வைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணியை அறிவித்தபோது,  எம்எஸ்கே பிரசாத் ராயுடு பதிவிட்ட ட்விட் "சரியான நேரத்தில்" இருந்ததாக கூறினார். மேலும், ட்விட்டை பாராட்டினார் பிரசாத். இந்திய அணிக்கு 4ம் நம்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்வு செய்யப்படாமல், ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். அதனால், ராயுடு மூன்று வடிவங்கள் வைத்து செய்த ட்விட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துடன் அரையிறுதியில் மோதி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

நம்பர் 4 பேட்ஸ்மேனால் தான் இந்தியா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதா என்ற கேள்விக்கு, எம்எஸ்கே பிரசாத்: "ட்விட்டை குறித்து கூறும் போது, சிறப்பாக இருந்தது. அந்த ட்விட்டை நான் மிகவும் ரசித்தேன்."

"அந்த ட்விட் சரியான நேரத்தில் பதிவிடப்பட்டது. அது எப்படி அவருக்கு தோன்றியது என்பது ஆச்சர்யமாக உள்ளது" என்று பிரசாத் தெரிவித்தார்.

ஏப்ரல் 16ம் தேதி இப்படியாக ராயுடு ட்விட் செய்தார்: "உலகக் கோப்பையை காண நான் இப்போது தான் 3டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளேன்."

மூன்று விதமான கிரிக்கெட்டில் விஜய் சங்கர் சிறப்பாக செயல்படுவதால் உலகக் கோப்பை போட்டியில் அவர் தேர்வு செய்யப்பட்டார் என்று பிரசாத் கூறியிருந்ததை அடுத்து ராயுடு இந்த ட்விட் செய்தார்.

அணியில் சேர்க்கப்படாததை அடுத்து, ராயுடு காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் இருவரும் காயம் காரணமாக வெளியேறிய பிறகும் ராயுடு அணியில் இணைக்கப்படவில்லை.

இரண்டு முறை கவனிக்கப்படாத ராயுடு, ஜூலை 3 ஆம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற போவதாக அறிவித்தார்.

"மதிப்பிற்குரிய சார், நான் விளையாட்டில் இருந்து விலகி அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்பதை தெரிவித்துகொள்கிறேன்" என்று ராயுடு பிசிசிஐ செயலாலர் அமிதாப் சவுத்ரி, மேலாளர் சபா கரீம் மற்றும் சிஇஓ ராகுல் ஜோரி ஆகியோருக்கு மெயில் அனுப்பினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அம்பதி ராயுடு ஒரு விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்" - முகமது அசாருதீன்!
"அம்பதி ராயுடு ஒரு விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்" - முகமது அசாருதீன்!
"ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஊழலில் ஈடுப்பட்டுள்ளது" - குற்றம் சாட்டும் அம்பதி ராயுடு
"ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஊழலில் ஈடுப்பட்டுள்ளது" - குற்றம் சாட்டும் அம்பதி ராயுடு
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
ஓய்வு முடிவில்
ஓய்வு முடிவில் 'யூ-டர்ன்' அடித்திருக்கும் அம்பதி ராயுடு!
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" -
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" - '3டி' ட்விட் குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத்!
Advertisement