ஓய்வு முடிவில் 'யூ-டர்ன்' அடித்திருக்கும் அம்பதி ராயுடு!

Updated: 30 August 2019 13:59 IST

33 வயதான ராயுடு, ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷனுக்கு (HCA) கடிதம் எழுதினார். அதில், ஓய்வ் அறிவித்தது தனக்கு உணர்ச்சிவசமாக இருப்பதாகவும், அடுத்த போட்டிகளின் தேர்வுக்கு தயாராக இருப்பதாக கூறுயுள்ளார்.

Ambati Rayudu Comes Out Of Retirement, Available For Shorter Formats
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்த அம்பதி ராயுடு, இப்போது தன்னுடைய அறிவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். © AFP

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்த அம்பதி ராயுடு, இப்போது தன்னுடைய அறிவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். 33 வயதான ராயுடு, ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷனுக்கு (HCA) கடிதம் எழுதினார். அதில், ஓய்வ் அறிவித்தது தனக்கு உணர்ச்சிவசமாக இருப்பதாகவும், அடுத்த போட்டிகளின் தேர்வுக்கு தயாராக இருப்பதாக கூறுயுள்ளார். கடந்த வியாழக்கிழமை, HCAக்கு இமெயில் அனுப்பிய ராயுடு, "நான் ஓய்வில் இருந்து வெளியே வந்து அனைத்து வடிவங்களிலும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்". "கடினமான நேரத்தில் மிகவும் உறுதுணையாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், வி.வி.எஸ். லக்ஷ்மன் மற்றும் நோயல் டேவிட் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன்.

"நான் மிகவும் திறமையான ஹைதராபாத் அணியுடன் ஒரு அற்புதமான பருவத்தை எதிர்நோக்குகிறேன், மேலும் அதன் முழு திறனை உணர அணிக்கு உதவுகிறேன். நான் ஹைதராபாத் அணியின் இணைய செப்டம்பர் 10ம் தேதி முதல் தயாராக இருப்பேன், என்று எழுதினார்.

ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் சிஓஏ இதை தெளிவுப்படுத்தும் விதமாக, ராயுடு தனது ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றதாகவும், 2019-20 ஆம் ஆண்டிற்கான எச்.சி.ஏ க்கான விளையாட்டின் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு தன்னை தயார் நிலையில் வைத்திருக்கிறார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்" என்றது.

உலகக் கோப்பையில் காயம் காரணமாக வெளியேறிய ஷிகர் தவானுக்கு பதிலாக தன்னை தேர்வு செய்யவில்லை என்பதால், ராயுடு ஓய்வு அறிவித்தார்.

முன்னதாக, 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணிக்கு ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். அதனால், இந்த முடிவை கிண்டல் செய்யும் விதமாக, " உலகக் கோப்பையை காண நான் இப்போது 3டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளேன்" என்று எம் எஸ் கே பிரசாத்தை குறிப்பிடும்படி ட்விட் செய்தார்.

கடந்த வருடம், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முதல்தர கிரிக்கெட்டிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்து, தான் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த போவதாக கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அம்பதி ராயுடு ஒரு விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்" - முகமது அசாருதீன்!
"அம்பதி ராயுடு ஒரு விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்" - முகமது அசாருதீன்!
"ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஊழலில் ஈடுப்பட்டுள்ளது" - குற்றம் சாட்டும் அம்பதி ராயுடு
"ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஊழலில் ஈடுப்பட்டுள்ளது" - குற்றம் சாட்டும் அம்பதி ராயுடு
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
ஓய்வு முடிவில்
ஓய்வு முடிவில் 'யூ-டர்ன்' அடித்திருக்கும் அம்பதி ராயுடு!
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" -
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" - '3டி' ட்விட் குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத்!
Advertisement