அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு!

Updated: 03 July 2019 14:40 IST

நடந்து வரும் உலகக் கோப்பை 2019 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி முதன்முதலில் தேர்வு செய்யப்பட்ட போது, அம்பத்தி ராயுடுவின் பெயர் இடம்பெறவில்லை.

Ambati Rayudu announces retirement from cricket
தனது ஓய்வு குறித்து ராயுடு, பிசிசிஐ-க்குக் கடிதம் எழுதியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன அம்பத்தி ராயுடு, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பிசிசிஐ-க்குக் கடிதம் எழுதியுள்ளார். ராயுடு, அவர் அறிவிப்பு குறித்து இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை எனினும், பிசிசிஐ அமைப்பின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

நடந்து வரும் உலகக் கோப்பை 2019 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி முதன்முதலில் தேர்வு செய்யப்பட்ட போது, அம்பத்தி ராயுடுவின் பெயர் இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானுக்குக் காயம் ஏற்பட்டது. அவருக்கு பதில் ராயுடுவை சேர்க்க வாய்ப்பிருப்பதாக பேசப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பன்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

தொடர்ந்து அணியில் இருந்த விஜய் ஷங்கருக்குக் காயம் ஏற்பட்டது. அவருக்கு பதில் இளம் வீரரான மாயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார். இப்படி ராயுடு, தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வந்தார். 

இப்படிப்பட்ட சூழலில்தான் அனைத்து வித கிரிக்கெப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். 

இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு, 47,05 சராசரியில் 1,694 ரன்கள் குவித்துள்ளார். இந்தியா சார்பில் 4வது பேட்ஸ்மேனாக களமிறங்க தகுதியுடையவர் என்று ஒரு கட்டத்தில் ராயுடு பாராட்டாப்பட்டார். இது குறித்து விராட் கோலி கூட சில மாதங்களுக்கு முன்னர் வெளிப்படையாக கருத்து கூறினார். ஆனால் ராயுடுவுக்கு பதில் இந்திய அணியில் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்தாலும், டெஸ்ட் அணியில் ராயுடு இடம் பிடிக்கவில்லை. 

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ராயுடு, 147 போட்டிகளில் விளையாடி 28.7 சராசரியில் 3,300 ரன்கள் குவித்துள்ளார். 18 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்தை அடித்துள்ளார் ராயுடு. மும்பை இந்தியன்ஸுக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸுக்காகவும் விளையாடினார் ராயுடு. 

6 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ராயுடு, 10.5 சராசரியில் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

முன்னதாக விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்படதற்கு, அவரது ‘முப்பரிமாண' திறமை (பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்) ஆகியவையே காரணம் என்று சொல்லப்பட்டது. இதை கேலி செய்யும் வகையில் ராயுடு, “உலகக் கோப்பைத் தொடரின் முப்பரிமாணத்தையும் பார்ப்பதற்கு புதியதாக 3டி கிளாஸ் வாங்கியுள்ளேன்” என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

ராயுடு, பல நேரங்களில் தனது சக வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுடன் வெடுக்கென கோபப்படும் சம்பவங்கள் முன்னரும் நடந்துள்ளன. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
ஓய்வு முடிவில்
ஓய்வு முடிவில் 'யூ-டர்ன்' அடித்திருக்கும் அம்பதி ராயுடு!
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" -
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" - '3டி' ட்விட் குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத்!
அம்பத்தி ராயுடுவின் ஓய்விற்கு கோலியின் ரியாக்சன் என்ன தெரியுமா..?
அம்பத்தி ராயுடுவின் ஓய்விற்கு கோலியின் ரியாக்சன் என்ன தெரியுமா..?
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு!
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு!
Advertisement