"நான் இங்கு தபேலா வாசிக்கவா இருக்கேன்?" - பன்ட் பிரச்னை குறித்து ரவி சாஸ்திரி!

Updated: 26 September 2019 18:06 IST

வியாழக்கிழமை இந்துஸ்தான் டைம்ஸிடம் பேசிய ரவி சாஸ்திரி, தனது அறிக்கையை ஆதரித்து, யாராவது முட்டாள்தனமாக இருந்தால், அவரை மேலே இழுப்பேன் என்று கூறினார்.

Ravi Shastri Defends "Rap On The Knuckles" Remark On Rishabh Pant
அணி நிர்வாகத்தின் மாறுபட்ட கருத்துக்கள் பன்ட் மீது அழுத்தத்தை சேர்க்கிறதா என்று ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. © AFP

ரிஷப் பன்ட் பேட்டை கொண்டு சிறப்பாக செயல்படாதது ரசிகர்கள், கிரிக்கெட் பண்டிட்ஸ் மற்றும் இந்திய அணி நிர்வாகத்தினரிடையே கவலைக்குரிய ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட, ரிஷப் பன்ட் தொடர்ந்து வெறித்தனமான ஷாட்களை விளையாடுகிறார் என்றால், அவருக்கு "rap on the knuckles" கிடைக்கும் என்று கூறியிருந்தார். வியாழக்கிழமை இந்துஸ்தான் டைம்ஸிடம் பேசிய ரவி சாஸ்திரி, தனது அறிக்கையை ஆதரித்து, யாராவது முட்டாள்தனமாக இருந்தால், அவரை மேலே இழுப்பேன் என்று கூறினார்.

அணி நிர்வாகத்தின் மாறுபட்ட கருத்துக்கள் பன்ட் மீது அழுத்தத்தை சேர்க்கிறதா என்று ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாஸ்திரி, பன்ட் தனக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பெறுகிறார், அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர் என்றார்.

"அணி நிர்வாகம், நான் பன்ட்டை கண்டித்தேன் என்று சொல்லாதீர்கள். யாராவது முட்டாள்தனமாக இருந்தால், நான் அவர்களை சரி செய்வேன். நான் இங்கு தபேலா வாசிக்கவா இங்கு இருக்கிறேன்? ரிஷப் பன்ட் உலகத்தரமான வீரர். அவர் ஒரு அதிரடி வீரர், வாய்ப்பு கிடைத்தால் எதிரணி பவுலர்களை துவம்சம் செய்துவிடுவார்," என்றார் ரவி சாஸ்திரி.

தனது மோசமான ஷாட் தேர்வு மற்றும் நாட்டிற்கான விளையாட்டுகளை முடிக்க முடியாமல் போனதற்காக பன்ட் எதிர்கொண்ட விமர்சனங்களைப் பற்றி பேசிய சாஸ்திரி, வல்லுநர்கள் பேச முடியும். ஆனால் பன்ட் ஒரு சிறப்பு குழந்தை என்று கூறினார்.

"வல்லுநர்களே, அவர்களுக்கு ஒரு வேலை இருக்கிறது, அவர்களால் பேச முடியும். பன்ட் ஒரு சிறப்புக் குழந்தை, அவர் ஏற்கனவே போதுமானதைச் செய்துள்ளார். மேலும் அவர் கற்றுக் கொள்ளப் போகிறார். இந்த குழு நிர்வாகம் அவரை ஆதரிக்கும்" என்று சாஸ்திரி மேலும் கூறினார்.

ரிஷப் பன்ட் ஒருநாள் போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் 229 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் குறுகிய வடிவத்தில், பன்ட் 19 இன்னிங்ஸ்களில் 325 ரன்கள் எடுத்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Bangladesh: மீம்ஸ்களுக்கு இரையாகிய ரவி சாஸ்திரியின் ட்விட்டர் பதிவு!
India vs Bangladesh: மீம்ஸ்களுக்கு இரையாகிய ரவி சாஸ்திரியின் ட்விட்டர் பதிவு!
"என்னுடைய மிகப் பெரிய விமர்சகர்" - தாய்க்கு ரவி சாஸ்திரியின் வாழ்த்து!
"என்னுடைய மிகப் பெரிய விமர்சகர்" - தாய்க்கு ரவி சாஸ்திரியின் வாழ்த்து!
விராட் கோலிக்கு வாழ்த்து சொன்ன ரவி சாஸ்திரி... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
விராட் கோலிக்கு வாழ்த்து சொன்ன ரவி சாஸ்திரி... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
"மீண்டும் குகைக்கு வந்த லெஜண்ட்" - தோனியுடன் புகைப்படம் பகிர்ந்த ரவி சாஸ்திரி
"மீண்டும் குகைக்கு வந்த லெஜண்ட்" - தோனியுடன் புகைப்படம் பகிர்ந்த ரவி சாஸ்திரி
Advertisement