கவுண்டி போட்டியில் ஆட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் ரஹானே!

Updated: 20 April 2019 15:19 IST

ஹாம்ஷயர் அணிக்காக ஆட அனுமதி கேட்டுள்ள ரஹானே, மே முதல் ஜூலை வரை நடக்கும் போட்டிகளில் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார்.

Ajinkya Rahane Seeks BCCI Permission To Play County Cricket
இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்க்யா ரஹானே பிசிசிஐ நிர்வாகத்திடம் கவுண்டி கிரிக்கெட் தொடரில் ஆட அனுமதி கேட்டுள்ளார். © AFP

இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்க்யா ரஹானே பிசிசிஐ நிர்வாகத்திடம் கவுண்டி கிரிக்கெட் தொடரில் ஆட அனுமதி கேட்டுள்ளார். ஹாம்ஷயர் அணிக்காக ஆட அனுமதி கேட்டுள்ள ரஹானே, மே முதல் ஜூலை வரை நடக்கும் போட்டிகளில் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார். இதே கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாக கமிட்டியிடமும் தாக்கல் செய்துள்ளார்.

நிர்வாக கமிட்டி சிஇஓ ராகுல் ஜோஹ்ரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் ஆட அனுமதி கேட்டுள்ளார் ரஹானே.

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், ரஹானே அனுமதிக்கு எந்த தடையும் இருக்காது என நம்புவதாக தெரிவித்தார். இந்திய கேப்டன் கோலி சர்ரே அணிக்காக ஆட அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

"கோலி, புஜாராவை போல ரஹானேவுக்கும் அனுமதி வழங்குவதில் சிக்கல் இருக்காது" என்றார்.

மேலும், "ரஹானே உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. அதனால் அவருக்கு சர்வதேச அணிக்காக ஆட வேண்டிய தேவை இருக்காது. அவர் கவுண்டி போட்டியில் ஆடுவது டெஸ்ட் அணிக்கு பலம் சேர்க்கும்" என்றார்.

சென்ற வருடம் ஐபிஎல் தொடர் உச்சத்தில இருந்த போது புஜாரா, யார்க்‌ஷையர் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ரஹானே கவுண்டி கிரிக்கெட் தொடரில் ஆட அனுமதி கேட்டுள்ளார்
  • ரஹானே மே முதல் ஜூலை வரை நடக்கும் போட்டிகளில் ஆட விருப்பம் தெரிவித்துள்ளா
  • இந்திய கேப்டன் கோலி சர்ரே அணிக்காக ஆட அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது
தொடர்புடைய கட்டுரைகள்
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
"சுப்மன் கில், ரஹானே ஏன் ஒருநாள் போட்டிகளில் இடம்பெறவில்லை" - கேள்வி எழுப்பும் கங்குலி!
"சுப்மன் கில், ரஹானே ஏன் ஒருநாள் போட்டிகளில் இடம்பெறவில்லை" - கேள்வி எழுப்பும் கங்குலி!
கேப்டன் சுமை குறைந்து சதமடித்து அசத்திய ரஹானே!
கேப்டன் சுமை குறைந்து சதமடித்து அசத்திய ரஹானே!
ராஜஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து ரஹானே நீக்கம்.. புதிய கேப்டன் ஸ்மித்
ராஜஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து ரஹானே நீக்கம்.. புதிய கேப்டன் ஸ்மித்
கவுண்டி போட்டியில் ஆட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் ரஹானே!
கவுண்டி போட்டியில் ஆட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் ரஹானே!
Advertisement