ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி ஆட்டத்தில் ரஹானே, உனக்டட்

Updated: 05 March 2019 22:19 IST

ஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் மார்ச் 25ம் தேதி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

IPL 2019: Ajinkya Rahane, Jaydev Unadkat To Feature In Rajasthan Royals
ராஜஸ்தான் ராயல்ஸின் முதற்கட்ட பயிற்சி, பயிற்சியாளர் பாடி அப்டான் தலைமையில் நடைபெற்றது. © Rajasthan Royals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் அஜின்க்யா ரஹானே மற்றும் உனக்டட் ஆகியோர் ஐபிஎல் தொடருக்கு முன் ராஜஸ்தான் ஆடும் பயிற்சி போட்டியில் ஆடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களுடன் சஞ்சு சாம்சன், பின்னி, தவால் குல்கர்னி மற்றும் புதுமுக வீரர்கள் ரியான் பராஜ்ம் சுப்ஹம் ரஞனே, ஷஷாங் சிங் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இந்த முறை பிங்க் நிற ஜெர்ஸியில் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸின் முதற்கட்ட பயிற்சி, பயிற்சியாளர் பாடி அப்டான் தலைமையில் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் பேட்டிங், பெளலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சிகள் அளிக்கபட்டன. 

பயிற்சியாளர் அப்டான், "ராஜஸ்தான் ராயல்ஸ் நிறைய திறமையான வீரர்களை கொண்டுள்ளது. அவர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்" என்றார்.

பயிற்சி முகாமில் கிருஷ்ணப்பா கெளதம், வருண் ஆரோன், ஷ்ரேயாஸ் கோபால், திரிபாதி, மிதுன் மற்றும் மனன் வோரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் சீசனில் பட்டம் வென்ற ராஜஸ்தான். இந்த சீசனில் முதல் போட்டியில் மார்ச் 25 கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர் கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • சஞ்சு சாம்சன், பின்னி ஆகியோரும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்
  • பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் பயிற்சிகள் 3 நாட்கள் அளிக்கப்பட்டன
  • ராஜஸ்தான் ராயல்ஸ் மார்ச் 25ம் தேதி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"இதுதான் சிறந்த
"இதுதான் சிறந்த 'ரிலே கேட்ச்' " - ராஜஸ்தான் ராயல்ஸ் பதிவிட்ட வீடியோ!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
ராஜஸ்தான் அணியை தோற்கடிக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு?
ராஜஸ்தான் அணியை தோற்கடிக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு?
Advertisement