ரஹானேவுக்கு காயம்: ஐபிஎல் தொடருக்கு திரும்புவாரா?

Updated: 07 March 2019 17:09 IST

ராஹானேவின் காயத்தை ஐபிஎல் ராஜஸ்தான் அணி கூர்ந்து கவனித்து வருகிறது.

Syed Mushtaq Ali Trophy: Ajinkya Rahane Declared Unfit For Super League Stage
லீக் போட்டிகளில் 6 போட்டியில் வெறும் 58 ரன்களை மட்டுமே குவித்தார் ரஹானே. © AFP

சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் மும்பை அணிக்கு கேப்டனாக இருக்கும் அஜின்கியா ரஹானே உடற்தகுதி தேர்வில் தகுதி பெறவில்லை. ரஹானே, காயம் காரணமாக கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. லீக் போட்டிகளில் 6 போட்டியில் வெறும் 58 ரன்களை மட்டுமே குவித்தார் ரஹானே. மும்பை அணியின் தேர்வுக்குழு சேர்மன் அகர்கர், "காயம் காரணமாக ரஹானேவுக்கு ஓய்வு தேவை" என்று கூறியுள்ளார்.

"லேசான காயத்துடன் ஆடி வந்தார். ஆனால் க்ரூப் சூப்பர் லீக் போட்டிகளுக்கான முழு தகுதியை ரஹானே பெறவில்லை" என்றார் அகர்கர்.

மும்பை, சி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. தனது 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்றிருந்தது மும்பை. ராஹானேயின் அனுபவம் அணியின் வெற்றிக்கு கைகொடுத்ததாக அகர்கர் தெரிவித்தார்.

ராஹானேவின் காயத்தை ஐபிஎல் ராஜஸ்தான் அணி கூர்ந்து கவனித்து வருகிறது. 30 வயதான ரஹானே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார். மார்ச் 25 முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • 6 போட்டியில் வெறும் 58 ரன்களை மட்டுமே குவித்தார் ரஹானே
  • மும்பை, சி பிரிவில் முதலிடத்தில் உள்ளது
  • 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்றிருந்தது மும்பை
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் ரஞ்சி டிராஃபி போட்டிக்கான மும்பை அணியில் அஜிங்க்யா ரஹானே, பிருத்வி ஷா
முதல் ரஞ்சி டிராஃபி போட்டிக்கான மும்பை அணியில் அஜிங்க்யா ரஹானே, பிருத்வி ஷா
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
Advertisement