கோலியை வீழ்த்த ஐடியா கொடுத்த இந்திய ஆல் ரவுண்டர்: ஸ்ம்பா விளக்கம்!

Updated: 04 March 2019 18:47 IST

விராட் கோலியை வீழ்த்த, இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஸ்ரீதரன் ஸ்ரீராம் தான் உதவியாக இருந்ததாக ஆடம் ஸம்பா கூறினார்.

India vs Australia: Adam Zampa Names Former India All-Rounder Who Helped Him Contain Virat Kohli
ஸம்பா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 2 முறை கோலியை வீழ்த்தியுள்ளார்.  © Cricket Australia

ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா விராட் கோலியை வீழ்த்தும் ரகசியத்தை கூறியுள்ளார். 26 வயதான ஸம்பா கோலியை முதல் டி20 போட்டியில் 24 ரன்னிலும், ஹைத்ராபாத் ஒருநாள் போட்டியில் 44 ரன்னிலும் வீழ்த்தினார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஸ்ரீதரன் ஸ்ரீராம் தான் உதவியாக இருந்ததாக கூறினார். 35 வயதான ஸ்ரீதரன் ஸ்ரீராம், இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என்று கூறியதாக ஸம்பா கூறினார்.

ஸம்பா, கோலியை 13 ஆட்டங்களில் 4 முறை அவுட் ஆக்கியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 2 முறை வீழ்த்தியுள்ளார். 

ஸ்ரீதரன் ஸ்ரீராமுக்கு அனுபவமும், இந்திய வீரர்களை பற்றிய அறிவும் உள்ளதாக தெரிவித்த ஸம்பா, ஸ்பின்னர்கள் மூலம் இந்தியாவை எதிர்கொள்ளும் உத்தியை உருவாக்கி கொடுத்தார் என்றும் கூறினார்.

இதேபோல் வீசிதான் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினேன் என்று கூறிய ஸம்பா, கோலியை பற்றிதான் அதிகமாக டீம் மீட்டிங்கில் பேசுவோம் என்றார்.

கோலி ஒரு சிறந்த, நம்பிக்கையளிக்கக்கூடிய வீரர் என்றார் ஸம்பா.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஸம்பா, கோலியை 13 ஆட்டங்களில் 4 முறை அவுட் ஆக்கியுள்ளார்
  • கோலி ஒரு சிறந்த, நம்பிக்கையளிக்கக்கூடிய வீரர்: ஸம்பா
  • ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
Advertisement