ஆஸி. பயிற்சியாளர் லாங்கர் சொல்லும் ஆஸ்திரேலியாவின் அபாயகராமன வீரர்!

Updated: 01 March 2019 17:12 IST

இந்தியாவுடனான டி20 தொடரில் 0,8 ரன்களில் வெளியேறினார் ஆரோன் பின்ச்.

Aaron Finch Is The Most Destructive Batsman In The World, Says Justin Langer
அக்டோபரில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து பின்ச் ஃபார்மில் இல்லாமல் திணறி வருகிறார். © AFP

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஆரோன் பின்ச்சின் ஃபார்ம் குறித்த கேள்விக்கு இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்பாக கருத்து தெரிவித்துள்ளார்.  பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் ''பின்ச் ஒரு சிறந்த வீரர். அணியை வழிநடத்தும் நல்ல கேப்டன்" என்றார்.

அக்டோபரில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து பின்ச் ஃபார்மில் இல்லாமல் திணறி வருகிறார். கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் முறையே 5,41,11,6,6 என்று ரன் குவித்துள்ளார். இந்தியாவுடனான டி20 தொடரிலும் 0,8 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு லாங்கள், "நாங்கள் அவரை அதிகம் நம்புகிறோம். அதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கிறோம்" என்று கூறியுள்ளார். 

ஆஸியின் அபாயகரமான வீரராக மேக்ஸ்வெல், ஸ்டோனின்ஸை கூறுகிறோம். ஆனால் உண்மையில் ஆட்டம் சூடு பிடித்தால் பின்ச் தான் அதிரடி வீரர் என்றார் லாங்கர்.

பின்ச், கடைசியாக அரைசதமடித்து 19 இன்னிங்ஸ்கள் ஆகிவிட்டன. பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாமல் போனாலும் ஒரு கேப்டனாக பின்ச் சிறப்பாகவே செயல்படுகிறார். டி20 தொடர் வெற்றி பின்ச்சுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்றும் கூறியுள்ளார் லாங்கர்.

ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான ஒருநாள் தொடர் நாளை ஹைதராபாத்தில் துவங்குகிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • பின்ச், கடைசியாக அரைசதமடித்து 19 இன்னிங்ஸ்கள் ஆகிவிட்டன
  • பின்ச் ஒரு சிறந்த வீரர், அணியை வழிநடத்தும் நல்ல கேப்டன்: லாங்கர்
  • அக்டோபரில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து பின்ச் ஃபார்மில் இல்லை
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: நியூசிலாந்து - ஆஸி பலப்பரீட்சை! #Preview
உலகக் கோப்பை 2019: நியூசிலாந்து - ஆஸி பலப்பரீட்சை! #Preview
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
“வங்க தேசத்தின் சேஸிங் அள்ளு கிளப்புச்சுங்க…”- ஆஸி., கேப்டன் ஓப்பன் டாக்
“வங்க தேசத்தின் சேஸிங் அள்ளு கிளப்புச்சுங்க…”- ஆஸி., கேப்டன் ஓப்பன் டாக்
"பால் ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை என்பது ஆர்ச்சர்யமளிக்கிறது" - கோலி
"பால் ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை என்பது ஆர்ச்சர்யமளிக்கிறது" - கோலி
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
Advertisement