"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!

Updated: 23 September 2019 12:16 IST

11வது ஓவரின் போது, திரையில் ஒரு கிராஃபிக் வந்தது. அதில், "டி20 போட்டிகளில் யார் 4வது இடத்தில் ஆட வேண்டும்," என்று கேட்டு ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரில் புகைப்படங்களும் காட்டப்பட்டது.

3rd T20I: Sunil Gavaskar Asks "Who Should Bat At No. 4" In KBC Style. Watch
டி20 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா 9 ரன் வித்தியாசத்தில் தோற்றது. © AFP

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், பெங்களூருவில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நடிகர் அமிதாப் பச்சனைப் போல்  கமெண்டரி செய்தார். இது மிகவும் வைரலானது. 'குரோர்பதி' நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் கேட்பது போல, 72 வயதான கவாஸ்கர் நேற்று கமெண்டரியின்போது, "4வது இடத்தில் யார் ஆட வேண்டும்" என்று கேட்டார். "இந்த தங்கம் சன்னி ஜியிடமிருந்து வந்துள்ளது. கேசிபி விளக்கம்போல, சன்னி ஜி ஸ்டைலில் இருந்தால் எப்படி இருக்கு. #INDvSA" என்று அந்த வீடியோவுடன் பிசிசிஐ பதிவிட்டது. அதில், சுனில் கவாஸ்கர் ஹர்ஷா போக்லேயுடன் பேசுவது நன்றாக கேட்கிறது.

11வது ஓவரின் போது, திரையில் ஒரு கிராஃபிக் வந்தது. அதில், "டி20 போட்டிகளில் யார் 4வது இடத்தில் ஆட வேண்டும்," என்று கேட்டு ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரில் புகைப்படங்களும் காட்டப்பட்டது.

"ஆ, இது குரோர்பதி கேள்வி தான்," என்று கவாஸ்கர் 49 வினாடிகள் வந்த வீடியோவில் சொல்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா 9 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் ட்ராவானது.

மொகாலியில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, குயின்டன் டி கோக் அரைசதம் அடித்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா இந்தியாவை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தென்னாப்பிரிக்க பவுலர்களான கசிகோ ரபாடா, பிஜோர்ன் ஃபோர்ட்யூன் மற்றும் பெரன் ஹென்றிக்ஸ், இந்திய வீரர்களில் 7 பேரை வீழ்த்தினர். இதனால், இந்தியா 134/9 என்ற ரன்களை மட்டுமே குவித்தது.

கேப்டன் டி காக் பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கான ஆடிய ஆட்டமிழக்காத 52 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் குவித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பேராசையை குணப்படுத்த முடியாது" - மேட்ச் பிக்சிங் குறித்து பேசிய கவாஸ்கர்!
"பேராசையை குணப்படுத்த முடியாது" - மேட்ச் பிக்சிங் குறித்து பேசிய கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது" - சுனில் கவாஸ்கர்!
"ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது" - சுனில் கவாஸ்கர்!
Advertisement