மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? #Preview

Updated: 05 August 2019 14:31 IST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி செவ்வாயன்று குயானாவில் நடக்கவுள்ளது.

3rd T20I Preview: India Eye T20I Series Whitewash Over West Indies
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றும் முனைப்போடு இந்தியா மூன்றாவது போட்டியை ஆடவுள்ளது. © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வென்றுள்ளது. 22 ரன்கள் வித்தியாசத்தில் (டக்வொர்த் லூயிஸ் முறை) வென்றது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்று முன்னிலையில் உள்ளது. டி20 தொடரை கைப்பற்றும் முனைப்போடு இந்தியா மூன்றாவது போட்டியை ஆடவுள்ளது. கேப்டன் விராட் கோலி ஏற்கெனவே அடுத்த போட்டியில் புது வீரர்களை அணியின் சேர்க்கவுள்ளதாக கூறியுள்ளார்.

"ஜெயிப்பது தான் முக்கியம். ஆனால், இரண்டு போட்டிகள் வெற்றிக்கு பிறகு புது வீரர்களை அணியில் இணைக்கலாம் என்று நினைக்கிறேன். அதிலும் அணி வெற்றி பெற வேண்டும் என்பது தான் நோக்கம். ஆனால், இரு போட்டிகள் வெற்றிக்கு பிறகு நம்பிக்கை அதிகரித்துள்ளது" என்று இரண்டாது போட்டி வெற்றிக்கு பிறகு விராட் கோலி கூறினார்.

கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் சஹார் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் அணியில் இணைக்கப்படவுள்ளனர். நான்காவது இடத்தில் ஆடும் ரிஷப் பன்ட் மற்றும் மணீஷ் பாண்டே ஆகிய இருவரும் சரியாக செயல்படவில்லை.

மணீஷ் பாண்டேவுக்கு பதிலாக ராகுல் அணியில் இணைக்கப்படவுள்ளார்.

இரண்டாவது டி20 குறித்து பேசிய கோலி, ஆட்டத்தின் தொடக்கத்தில் பிட்ச் நன்றாக இருந்ததாக கூறினார்.

"அணியில் உள்ள வீரர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள். ஜடேஜா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி 160 ரன்கள் எடுக்க உதவினர். 180 ரன்கள் எடுப்போம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிட்ச் பந்தைய ஆட்டத்தில் ஸ்லோ ஆனது" என்றார்.

19 வயதான சுந்தர், மூன்று ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து, முக்கிய விக்கெட்டான சுனில் நரேனை அவுட் ஆக்கினார். வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை இந்திய கேப்டன் விராட் கோலி பெரிதும் பாராட்டியுள்ளார்.

"புது பந்துடன் தொடங்கிய சுந்தர், சிறப்பாக செயல்பட்டார். அவரின் பந்துவீச்சு வியக்கத்தக்காக உள்ளது. அவர் இப்போது ஃபிட்டானவராகவும், மெலிதானவராகவும் உள்ளார். அவர் பேட்டிங்கிலும் சிறந்து செயல்படுகிறார்," என்றார் கோலி.

டி20 போட்டிகள் முடிந்தவுடன், மூன்று ஒருநாள் போட்டிகளும், இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி செவ்வாயன்று குயானாவில் நடக்கவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள்: கார்லஸ் பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்பெல், ஈவின் லிவிஸ், சிம்ரன் ஹெட்மெயர், நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், ரோவ்மேன் போவெல், கீமோ பால், சுனில் நரேன், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ், அந்தோனி ப்ராம்பெல், ஜேசன் முகமது, கியாரி பிரா

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), க்ருணால் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி.

Comments
ஹைலைட்ஸ்
  • தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா ஆடவுள்ளது
  • புளோரிடா நடந்த இரண்டு போட்டியையும் இந்தியா வென்றது
  • கடைசி டி20 போட்டி குயானாவில் நடக்கவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"
"'A' ஃபார் அனுஷ்கா" - கோலி வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ந்த ரசிகர்கள்!
Advertisement