தென்னாப்பிரிக்க ஃபீல்டர்களை கிண்டல் செய்த விராட் கோலி!

Updated: 11 October 2019 18:39 IST

கோலி, நான்கு போனஸ் ரன்களைப் பெற்ற பிறகு, தென்னாப்பிரிக்க பீல்டர்களை கட்டை விரலால் சைகை காட்டி கிண்டல் செய்தார்.

2nd Test: Virat Kohli Trolls South African Fielders After Hilarious Overthrow. Watch
எல்லா வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி 69வது சர்வதேச சதமடித்துள்ளார். © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 26வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். எல்லா வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து 69வது சர்வதேச சதமடித்துள்ளார். இந்திய கேப்டன் 2வது நாளில் தனது இன்னிங்ஸை 63 ரன்களுக்கு மீண்டும் தொடங்கினார். ஆரம்பத்தில் கவனமாக இருந்த கோலி மோசமான பந்துளை பவுண்டரிக்கு அனுப்பினார். தொடக்க நாளில் விராட் கோலி நகைச்சுவையான சம்பவத்தில் ஈடுபட்டார். 66வது ஓவரில், ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காகிசோ ரபாடாவின் வலதுபுறம் பந்தை வீசியதன் மூலம் கோலி விரைவாக ஒரு ரன் எடுத்தார். ரபாடா ஸ்டம்புகளை இலக்காகக் கொண்டார், ஆனால் அவரது இலக்கை ஒரு பெரிய வித்தியாசத்தில் தவறவிட்டார் மற்றும் பந்து ஒரு பவுண்டரிக்கு சென்றது. கோலி, நான்கு போனஸ் ரன்களைப் பெற்ற பிறகு, தென்னாப்பிரிக்க பீல்டர்களை கட்டை விரலால் சைகை காட்டி கிண்டல் செய்தார்.

வெள்ளிக்கிழமை, அஜின்கியா ரஹானே தனது 20வது டெஸ்ட் அரைசதம் அடித்தார். இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் ஆதிக்கத்தை நீட்டினார்.

முன்னதாக, மாயங்க் அகர்வால் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை உயர்த்தியபோது தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அறிமுக வீரர் அன்ரிச் நார்ட்ஜேயின் ஒரு பவுன்சரால் அகர்வால் ஹெல்மெட் மீது அடித்தார். ஆனால் தொடக்க வீரர் வலுவாக திரும்பி வந்து ஒரு ஓவரில் மூன்று பவுண்டரிகளை விலாசினார்.

டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் முந்தைய டெஸ்டில் இரட்டை சதமடித்த ரோஹித் ஷர்மா, விசாகப்பட்டினத்தில் விளையாடிய ஆட்டத்தை இங்கு காட்ட தவறவிட்டார். 10வது ஓவரில் ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்ததால் காகிசோ ரபாடாவின் கடுமையான வேகமும் நிலைத்தன்மையும் பலனளித்தன.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
Advertisement