இரண்டாவது ஒருநாள்: கங்குலியின் சாதனையை மிஞ்சிய விராட் கோலி!

Updated: 12 August 2019 11:22 IST

30 வயதான விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 49வது சதத்தை கடக்க இன்னும் 7 சதங்கள் எடுக்க வேண்டியுள்ளது.

2nd ODI: Virat Kohli Surpasses Sourav Ganguly With 42nd ODI Hundred
37.1 ஓவருக்கு இந்தியா 191 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கோலி 112 ரன்கள் குவித்தார். © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 42வது சதத்தை விராட் கோலி கடந்துள்ளார். 311 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள சவுரவ் கங்குலி, 11,363 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், கோலி 238 ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். 37.1 ஓவருக்கு இந்தியா 191 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கோலி 112 ரன்கள் குவித்தார். அதில், 10 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸும் அடங்கும்.

"விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் இன்னொரு மாஸ்டர் க்ளாஸ் @imVkohli @BCCI.. என்ன ஒரு சிறப்பான வீரர்," இந்தியன் கேப்டனை கங்குலி ட்விட்டரில் வாழ்த்தினார்.

30 வயதான விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 49வது சதத்தை கடக்க இன்னும் 7 சதங்கள் எடுக்க வேண்டியுள்ளது.

முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டாட்டை கடந்த இந்திய கேப்டன் 26 வயதான சாதனையை முறியடித்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட் செய்ய வந்தபோது கோஹ்லி 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜேசன் ஹோல்டர் வீசிய ஐந்தாவது ஓவரில் மியாண்டாட்டின் 1930 ரன்களை அவர் ஒரு ரன்னில் முறியடித்தார்

இது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கோலியின் 34 வது ஒருநாள் போட்டியாகும், அதே நேரத்தில் மியாண்டட் 64 போட்டிகளில் ஆடி இந்த ரன்களைக் குவித்தார்.

2009 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கோஹ்லி தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார். அவரின் முதல் சதம்  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2011ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் குவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கோலியின் ஆதிக்கம் செலுத்தி ஜூலை 2017 முதல் அக்டோபர் 2018 வரை அவர்களுக்கு எதிராக நான்கு ஒன்றுக்கு பின் ஒருன்றாக சதங்களை அவர் அடித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
Advertisement