46வது ஓவரில் தோனி கோலிக்கு சொன்ன வெற்றி சீக்ரெட்!

Updated: 06 March 2019 13:16 IST

ஷமி, பும்ரா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

Virat Kohli, Rohit Sharma, MS Dhoni Discussed Game Plan To Restrict Australia In Chase
விராட் கோலியின் அபார சதத்தால் இரண்டாவது போட்டியில் இந்தியா 250 ரன்கள் குவித்தது. © AFP

விராட் கோலியின் அபார சதத்தால் இரண்டாவது போட்டியில் இந்தியா 250 ரன்கள் குவித்தது. முன்னதாக டாஸ் வென்று பந்து வீசிய ஆஸ்திரேலியா இந்தியாவை 48.2 ஓவரில் 250 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது.

பின்னர், இந்த ரன்னை இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா பந்துவீச்சில் நெருக்கடி தந்தார். ஷமி மற்றும் விஜய் சங்கர் அபாரமாக பந்துவீசினர். இதனால் ஆஸ்திரேலியா 242 ரன்களக்கு ஆல் அவுட் ஆகி இந்தியாவிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதற்கான திட்டமிடலுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய கீப்பருமான தோனி பெரிதும் உதவியதாக கோலி தெரிவித்தார்.

மேலும், கோலி விஜய் சங்கரை வெகுவாக பாராட்டினார். கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதுமட்டுமின்றி துணைக் கேப்டன் ரோஹித் மற்றும் கீப்பர் தோனி இருவரும் ஆட்டத்தை கூர்ந்து கவனித்து அறிவுரை வழங்குகிறார்கள்.

"46வது ஓவரில் ஜாதவ் அல்லது விஜய் சங்கரை பயன்படுத்த எண்ணினேன். ஆனால், தோனி என்னிடம் வந்து ஷமி, பும்ரா விக்கெட்டை வீழ்த்துவார்கள். அப்படி நடந்தால் போட்டி நம் வசம் என்றார். அதன்படியே செய்தேன். விக்கெட்டும் வீழ்ந்தது.

பின்னர் 50வது ஓவரில் விஜய் சங்கரும் ஜொலிக்க இந்தியா வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் விஜய் சங்கர் அசத்தினார்" என்றார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி ராஞ்சியில் வெள்ளியன்று நடக்கிறது.

அடுத்த இரண்டு போட்டிகள் முறையே மொகாலி மற்றும் டெல்லியில் நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • பும்ரா, ஷமி, விஜய் சங்கர் 2வது ஒருநாள் போட்ட்டியில் சிறப்பாக செயல்பட்டனர்
  • கோலியின் அபார சதத்தால் இரண்டாவது போட்டியில் இந்தியா 250 ரன்கள் குவித்தது
  • கோலி, சிறப்பாக பந்துவீசிய விஜய் சங்கரை வெகுவாக பாராட்டினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்ரேயால், பன்ட் ஒன்றாக வந்திருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும்" - கோலி
"ஸ்ரேயால், பன்ட் ஒன்றாக வந்திருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும்" - கோலி
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
Advertisement