2019 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸ் தான் கேப்டன் - பிசிபி

Updated: 06 February 2019 12:54 IST

பாகிஸ்தான் அணியின் உலகக் கோப்பை தயாராகும் செயல்பாட்டில் உடனிருந்துள்ளார். சர்ஃப்ராஸ் நல்ல உத்திகளை வகுப்பவர், நல்ல கேப்டன் என்றும் கூறினார் இஸான் மணி.

2019 World Cup: Sarfraz Ahmed Picked As Pakistan
நிறவெறி கருத்துக்கு பின் 4 ஆட்டங்களில் தடை செய்யப்பட்டார் சர்ஃப்ராஸ். © AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டி தொடருக்கு பாகிஸ்தான் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமதுதான் செயல்படுவார் என்று கூறியுள்ளது. பிசிபி சேர்மன் இஸான் மணி இந்த அறிவிப்பை ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆஸ்திரேலிய தொடருக்கும் சர்ஃப்ராஸ்தான் கேப்டன் என்றும் கூறினார்.

தென்னாப்பிரிக்க வீரர் பலுக்வாயோவுக்கு எதிரான நிறவெறி தாக்குதலில் ஈடுபட்ட காரணத்துக்காக 4 ஒருநாள் போட்டிகளில் ஆட சர்ஃப்ராஸுக்கு ஐசிசி தடை விதித்தது. சோயிப் மாலிக் இவருக்கு பதிலாக கேப்டன் பதவியை வகித்தார்.

எந்தவித சந்தேகமும் இன்றி சர்ஃப்ராஸ்தான் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வழிநடுத்துவார் என்று மணி தெரிவித்தார். "சர்ஃப்ராஸ் ஒரு சிறந்த கேப்டன், 19 வயதுக்குட்பட அணியையும் அவர் வழிநடத்தியுள்ளார். அவர் மீது நிறைய நம்பிக்கையுள்ளது" என்றார். 

பாகிஸ்தான் அணியின் உலகக் கோப்பை தயாராகும் செயல்பாட்டில் உடனிருந்துள்ளார். அவர் நல்ல உத்திகளை வகுப்பவர், நல்ல கேப்டன் என்றும் கூறினார் இஸான் மணி.

நிறவெறி கருத்துக்கு பின் 4 ஆட்டங்களில் தடை செய்யப்பட்டார் சர்ஃப்ராஸ். அப்போது அவருக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் வாரியத்துக்கு நன்றி தெரிவித்தார்.  "உலகக் கோப்பை அணியை வழிநடத்துவது மகிழ்ச்சியான விஷயம். இதனை மிகப்பெரிய கெளரவமாக பார்க்கிறேன்" என்றார் சர்ஃப்ராஸ்.

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமது செயல்படுவார்
  • நிறவெறி கருத்துக்கு பின் 4 ஒருநாள் போட்டிகளில் தடை செய்யப்பட்டார்
  • சோயிப் மாலிக் இவருக்கு பதிலாக கேப்டன் பதவியை வகித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
சர்பராஸ் அகமதுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுரை!
சர்பராஸ் அகமதுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுரை!
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
சர்பராஸ் அகமது நீக்கத்துக்கு பிறகு பிசிபி வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை!
சர்பராஸ் அகமது நீக்கத்துக்கு பிறகு பிசிபி வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
Advertisement