ராகுல், பாண்ட்யாவுக்கு இரு ஒருநாள் போட்டிகளில் ஆட தடை?

Updated: 10 January 2019 19:41 IST

ஹர்திக் பாண்ட்யா, டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த கருத்துக்களை முன் வைத்ததற்காக மன்னிப்பு கேட்க சொல்லி விமர்சனங்கள் எழுந்தன.

Vinod Rai, CoA Chief, Recommends Two-ODI Ban For Hardik Pandya, KL Rahul, Calls Comments "Very Crass"
இரு வீரர்களுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார். © Instagram

ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும், பெண்கள் குறித்த தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா ''நான் அந்த நிகழ்ச்சியில் பேசியது தவறு தான். என்னை அறியாமல் அந்த கருத்துக்களை முன்வைத்தேன். அதற்கு வருத்தம் தெரிவிப்பதோடு மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ-யிடம் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார். மேலும் பயிற்சியாளர் மற்றும் மற்ற அணி வீரர்களிடமும் இந்த சம்பவத்தை விளக்கி மன்னிப்பு கோரியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், "இந்த விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை" என்று நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் இரு வீரர்களுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் எதுல்ஜியின் முடிவும் வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

டையனா எதுல்ஜியும் இதே கருத்தை முன் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால், இவர்களுக்கு இரு போட்டிகளில் ஆட தடை விதிக்கபடும் என்று தெரிகிறது.

முன்னதாக பிசிசிஐயின் நிர்வாக குழு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த கருத்துக்களை முன் வைத்ததற்காக மன்னிப்பு கேட்க சொல்லி விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கருத்துகளுக்காக இருவரிடமும் 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கேட்டு பிசிசிஐ எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு ஆயுதமாக விளங்குகிறார்" - கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்
"ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு ஆயுதமாக விளங்குகிறார்" - கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்
இந்திய அணியின் மோசமான டான்ஸர், ரூம்மெட் யார் என கூறும் ரோஹித் ஷர்மா?
இந்திய அணியின் மோசமான டான்ஸர், ரூம்மெட் யார் என கூறும் ரோஹித் ஷர்மா?
உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்!
உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்!
"நட்புனா என்னனு தெரியுமா" கே.எல்.ராகுல் விருதை வாங்கிய ஹர்திக் பாண்ட்யா
"நட்புனா என்னனு தெரியுமா" கே.எல்.ராகுல் விருதை வாங்கிய ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் குவாலிஃபையர் 1: வைரலான தோனி - ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் குவாலிஃபையர் 1: வைரலான தோனி - ஹர்திக் பாண்ட்யா ''ப்ரோமேன்ஸ்''
Advertisement