இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?

Updated: 23 January 2020 17:13 IST

இந்தியாவில் நடந்த ஒருநாள் சர்வதேச தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

1st T20I: When And Where To Watch Live Telecast, Live Streaming
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி இந்தியாவை வழிநடத்தினார். © Twitter

இந்தியாவில் நடந்த ஒருநாள் சர்வதேச தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு நியூசிலாந்திற்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியதால் டி 20 ஐ தொடருக்கு முன்னதாக இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. நியூசிலாந்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடருக்கான டி20 அணியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் திரும்ப அழைக்கப்பட்டார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி, விளையாட்டின் குறுகிய வடிவத்தில் சரியான கலவையை முன்னேற்றுவார். நியூசிலாந்தைப் பொறுத்தவரையில், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இழந்ததால், அவர்களின் கேப்டன் கேன் வில்லியம்சன் மீது கவனம் செலுத்தப்படும். விளையாட்டிற்கு முன்னால் பேசிய விராட் கோலி தனது எதிரணியைப் பாராட்டினார், வில்லியம்சன் ஒரு "ஸ்மார்ட் கிரிக்கெட் வீரர்" என்றும், அவர் தனது அணியின் வீரர்களின் மரியாதை என்றும் கூறினார்.

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி எப்போது?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி ஜனவரி 24, 2020 (வெள்ளிக்கிழமை).

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி எங்கே நடக்கிறது?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் (ஆக்லாந்து) நடக்கிறது.

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி மதியம் 12.20 மணிக்கு தொடங்கும்.

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டியின் லைவ் எங்கு காணலாம்?

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டியை ஹாட்ஸ்டார் காணலாம். மேலும், sports.ndtv.com தளத்திலும் பார்க்கலாம்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ளும்
  • முதல் போட்டி ஆக்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும்
  • இந்திய கேப்டன் விராட் கோலி தனது எதிரணியைப் பாராட்டினார்
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
Advertisement