முதல் டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கான்!

Updated: 22 February 2019 12:45 IST

ஆல்ரவுண்டர் நபி 40 பந்தில் 49 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

Afghanistan vs Ireland, 1st T20I: Mohammad Nabi, Najibullah Zadran Power Afghanistan To Five-Wicket Win Against Ireland
ஸட்ரான் 36 பந்தில் 40 ரன் குவித்து மறுமுறையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  © Twitter

முகமது நபி மற்றும் நஜிபுல்லா ஸட்ரான் ஆகியோரின் 86 ரன் பார்ட்னர்ஷிப் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வெற்றிபெற வைத்துள்ளது. டேராடூனில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. ஆல்ரவுண்டர் நபி 40 பந்தில் 49 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஸட்ரான் 36 பந்தில் 40 ரன் குவித்து மறுமுறையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

முன்னதாக நபி மற்றும் ரஷித் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அயர்லாந்தை 20 ஓவரில் 132/6 என்ற ஸ்கோரில் கட்டுப்படுத்தினர். அயர்லாந்து 65 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர், டோக்ரெல் மற்றும் கீப்பர் ஸ்டூவர்ட்டின் சிறப்பான ஆட்டத்தால் 132 ரன்களை எட்டியது அயர்லாந்து. 

டி20 போட்டிகளின் நம்பர் 1 பந்துவீச்சாளரான ரஷித் கான் தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 8 போட்டிகளை வென்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான். 

இரண்டாவது போட்டி வரும் சனியன்று இதே மைதானத்தில் நடக்கிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கான்
  • ல்ரவுண்டர் நபி 40 பந்தில் 49 ரன்கள் குவித்தார்
  • 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
சச்சினின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்...!
சச்சினின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்...!
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
World Cup 2019: ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!
World Cup 2019: ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!
“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!
“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!
Advertisement