உலகக் கோப்பைக்கு முன்னோட்டம்: டி20 தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?

Updated: 01 March 2019 17:52 IST

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி ஒருநாள் தொடர் இது.

1st ODI Preview: With World Cup In Mind, India Eye Positive Start Against Australia After T20I Setback
தற்போது இந்தியா ஆடவுள்ள இந்த ஒருநாள் தொடர் உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. © AFP

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி ஒருநாள் தொடர் இது. தற்போது இந்தியா ஆடவுள்ள இந்த ஒருநாள் தொடர் உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

போட்டிக்கு முன்பு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி ''எல்லா அணிகளும் உலகக் கோப்பைக்கு முன்பு சிறப்பாக ஆடவே நினைப்பார்கள். ஆனால், நாம் ஏற்கெனவே சிறப்பாக தான் ஆடி வருகிறோம். இப்போது ஒரு ஆட்டத்தையும் இழக்ககூடாது என்ற எண்ணத்துடன் களமிறங்குவோம்" என்றார். 

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் உள்ள இரண்டு இடங்களுக்கு பன்ட், ராகுல், விஜய் சங்கர் மற்றும் கவுல் ஆகிய நான்கு பேர் போட்டி போட்டு வருகின்றனர். தினேஷ் கார்த்திக் உலகக் கோப்பையில் இடம் பெற மிக சொற்பமான வாய்ப்புகளே உள்ளது. 

ராகுல், பன்ட், விஜய் சங்கர், சித்தார்த் கவுல் நான்கு பேருக்குமே இந்த தொடர் நிரூபிக்க வேண்டியதற்கான தொடராக அமையும். 

ராகுல், டி20 தொடரில் இரண்டு போட்டிகளிலும் 50 மற்றும் 47 ரன்களை குவித்து அசத்தி டாப் ஆர்டர் வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்திய அணியின் மாற்று துவக்க வீரராக ராகுல் இருப்பார் என்று எதிரபார்க்கப்படுகிறது.

பன்ட் அவுட் ஆனாலும் அவர் மீது அதிக நம்பிக்கையிருப்பதாகவும், அணியில் அவருக்கு அதிக வாய்ப்பு தரப்படும் என்றும் கேப்டன் கோலி கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதியால் விஜய் சங்கர் இடம்பெறலாம் என்று தெரிகிறது. கலீல் அகமது, கவுல் இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹமி, பும்ரா இந்தியாவின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல குல்தீப் மற்றும் சஹால் பிரதான சுழற்பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள்.

ஜாதவ், ராயுடு போன்றவர்களால் பேட்டிங் வலுப்பெறும் என்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் சுழற்பந்துவீச்சில் லையன், ஸம்பா ஆகியோரை பெரிதும் நம்பியுள்ளது. 

அணி விவரம்:

இந்தியா

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுவேந்திர சஹால், ரிஷப் பன்ட், சத்தார்த் கவுல், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா

ஆஸ்திரேலியா:

ஆரோன் பின்ச்(கேப்டன்), டோர்ஸே ஷார்ட், ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனின்ஸ், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரே, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா, ஜேஸன் பெகன்ட்ராஃப், ஜெய் ரிச்சர்ட்ஸன், பாட் கம்மின்ஸ், ஆன்ட்ரூ டை, நாதன் கோல்டர் நைல், நாதன் லையன்

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி ஒருநாள் தொடர் இது
  • முதல் ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை ஹைதராபாத்தில் நடக்கிறது
  • உலக கோப்பை 2019 மே 30 முதல் துவங்குகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் ஒருநாள் போட்டி: தோனி, ஜாதவ் அபாரம்... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! #Highlights
முதல் ஒருநாள் போட்டி: தோனி, ஜாதவ் அபாரம்... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! #Highlights
உலகக் கோப்பைக்கு முன்னோட்டம்: டி20 தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?
உலகக் கோப்பைக்கு முன்னோட்டம்: டி20 தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?
Advertisement