2018 காமன்வெல்த் போட்டிகள்: ஊசி விவகாரத்தில் வெளியேற்றப்பட்ட இந்திய வீரர்கள்

Updated: 20 June 2018 13:26 IST

காமன்வெல்த் போட்டிகளின் போது எந்தவித காரணமும் இன்றி முறையான மருத்துவ ஆலோசகர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறை

Commonwealth Games 2018: India Hasn
Irfan Thodi and Rakesh Babu were suspended from CWG 2018 after syringes were found in their room (File) © AFP

காமன்வெல்த் போட்டிகளின் போது எந்தவித காரணமும் இன்றி முறையான மருத்துவ ஆலோசகர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், தற்போது நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளின் போது இந்திய வீரர்கள் இருவர் ஊசி பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா விளையாட்டுக் கூட்டமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து காமன்வெல்த் போட்டிகளின் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகத் தலைவர் டேவிட் க்ரேவம்பெர்க் கூறுகையில், “இந்திய வேக நடை வீரர் இர்ஃபான் மற்றும் ட்ரிபிள் ஜம்பர் ராகேஷ் பாபு ஆகியோர் மீது உள்ள குற்றச்சாட்டு மற்றும் தண்டனையில் இதுவரையில் மாற்றம் இல்லை. இதன் பின்னர் இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்தால் பின்னர் ஆலோசிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

இந்திய விளையாட்டுக் கூட்டமைப்பின் சார்பில் கூடுதல் விசாரணை நடத்திய பிறகுதான் மேற்கொண்டு எந்த முடிவையும் எடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அவசரமாக முறையீடு செய்து விவகாரத்தின் வீரியத்தைக் கூட்ட வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து விசாரணையை மேற்கொள்ள விளையாட்டுக் கூட்டமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றம் நிரூபனம் ஆனால் அந்த இரண்டு வீரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெளியேற்றப்பட்ட இரண்டு வீரர்களுக்கும் அவர்கள் கலந்து கொள்ள வந்த போட்டி முன்னதாகவே முடிந்துவிட்டது. 20கிமீ வேக நடையில் இர்பான் 13-ம் இடமும், பாபு தனது போட்டியில் காயமடைந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டு வீரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
  • விசாரணையை மேற்கொள்ள விளையாட்டுக் கூட்டமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது
  • இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்தால் பின்னர் ஆலோசிக்கலாம்
தொடர்புடைய கட்டுரைகள்
தங்க மகள் ஸ்வப்னாவின் வெற்றியால் விழாக்கோலம் பூண்ட ஜல்பாய்குரி நகரம்!
தங்க மகள் ஸ்வப்னாவின் வெற்றியால் விழாக்கோலம் பூண்ட ஜல்பாய்குரி நகரம்!
ஆசிய போட்டிகள்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி சிந்து!
ஆசிய போட்டிகள்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி சிந்து!
ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: தடகளத்தில் தமிழக வீரருக்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: தடகளத்தில் தமிழக வீரருக்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement