உலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்

Updated: 30 May 2018 18:24 IST

இறுதி நாள் போட்டியில் ஃபிரான்சை சேர்ந்த மாக்சிம் வாச்சியரை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

Viswanathan Anand Wins Bronze At World Blitz Chess Championship
Viswanathan Anand started the 12th round with a victory over Etienne Bacrot of France. © AFP

உலக ப்ளிட்ஸ் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வனாதன் ஆனந்த் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்; இரு தினங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் போட்டியில் ரஷ்யா ஆட்டக்காரரான இயன் நேப்போனியாச்சிக்கை சந்தித்த விஸ்வனாதன் ஆனந்த் சற்று தடுமாறி தோல்வி அடைந்தார். ஆனால் இறுதி நாள் போட்டியில் ஃபிரான்சை சேர்ந்த மாக்சிம் வாச்சியரை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

11 சுற்றில்  7 புள்ளிகள் பெற்று இருந்த நார்வே ஆட்ட நாயகன் கார்ல்சன் இறுதி நாள் அன்று 16 புள்ளிகள் பெற்று முன்னிலை வகுத்தார்.

ஆனந்தும் 10 வது சுற்று வரை 7.5 புள்ளிகள் பெற்று ரசிய ஆட்டக்காரர் கர்ஜகின் உடன் டிராவில் முடித்தார். முதல் சுற்றுகளில் சற்று தடுமாறினாலும் இறுதி சுற்றுகளில் பிரான்ஸை சேர்ந்த பக்ரோட், ரஷ்யாவை சேர்ந்த வ்லாடமிர் ஃபிடோசீவ், ஜார்ஜியாவை சேர்ந்த பாதூர் ஜொபவா மற்றும் அர்மேனியாவை சேர்ந்த டிக்ரனை வீழ்த்தி முன்னிலை வகித்தார்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற இந்தியர்களில் பி. ஹரிகிருஷ்ணா மற்றும்  விதித் குஜராத்தி 12.5 புள்ளிகள் பெற்றனர், பின் பி ஆதிபன் 11 புள்ளியும், சூர்ய சேகர் கங்குலி, எஸ்.பீ. சேதுராமன் ஆகியோர் 10 புள்ளிகளுடன் முடித்தனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • உலக ப்ளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார் ஆனந்த்
  • ஆனந்த் மாக்சிம் வாகீயர்-லகிரேவ்-ஐ வீழ்த்தி வெற்றி பெற்றார்
  • சில நாட்களுக்கு முன் ராபிட் பிரிவில் தங்கம் வென்றார் ஆனந்த்
தொடர்புடைய கட்டுரைகள்
"அங்கு நான் முட்டாள் போல் நின்றிருந்தேன்" - உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்
"அங்கு நான் முட்டாள் போல் நின்றிருந்தேன்" - உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்
செஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
செஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
உலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்
உலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்
Advertisement